
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தார, தற்போது தன் கைவசம் அரை டஜன் படங்களை வைத்துள்ளார்.
இதுதவிர, மற்ற மொழிகளிலும் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடி போட்டு நடித்து வருகிறார். தற்போதைக்கு இவருடைய நடிப்பில் தமிழில், விக்ரமுடன் ‘இருமுகன்’, கார்த்தியுடன் ‘காஷ்மோரா’ ஆகிய படங்கள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.
இதையடுத்து, ‘டோரா’ என்ற திகில் படத்திலும், மீஞ்சூர் கோபி இயக்கும் புதிய படத்திலும், மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் தற்போது ‘டோரா’ படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. கைவசம் இத்தனை படங்கள் இருந்தாலும், அவரைத் தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்த வண்ணம்தான் இருக்கின்றன.
அதன்படி, தற்போது அதர்வா நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’ என்ற புதிய படம் ஒன்றில் நயன்தாரா நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கவிருக்கிறார். இவர் ஏற்கெனவே அருள்நிதியை வைத்து ‘டிமாண்டி காலனி’ என்ற படத்தை இயக்கியவர்.
இப்படத்திற்கு வசனங்களை பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதவிருக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவை கவனிக்கவிருக்கிறார். இசையமைப்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகிவில்லை. முடிவானதும் விரைவில் அறிவிப்பார்கள் என தெரிகிறது.
Post your comment
Related News | |
▪ | அதர்வா படத்தில் போலீஸாக நடிக்கும் நயன்தாரா! |
▪ | அதர்வாவுக்கு நயன்தாரா ஜோடி இல்லையாம்! |
▪ | 4 ஹீரோயின்களுக்கு ஹீரோவான அதர்வா! |
![]() |