அதர்வா படத்தில் போலீஸாக நடிக்கும் நயன்தாரா!

Bookmark and Share

அதர்வா படத்தில் போலீஸாக நடிக்கும் நயன்தாரா!

2015-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ஹாரர் படம் டிமாண்டி காலணி. இப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அஜய் ஞானமுத்து.

இவர் அடுத்ததாக அதர்வாவை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இமைக்கா நொடிகள் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அதர்வா ஜோடியாக முதல்முறையாக நயன்தாரா நடிக்கவிருப்பதாக நேற்று தகவல் வெளியானது.

ஆனால் இப்படத்தில் நயன்தாரா, அதர்வா ஜோடியாக நடிக்கவில்லையாம். மாறாக போலீஸ் அதிகாரியாக ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடிக்கவுள்ளார். மேலும் அதர்வா ஜோடியாக வேறொரு முன்னணி நடிகை இப்படத்தில் நடிக்கவுள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions