தீவுத் திடலில் பொருட்காட்சி... தொடங்கி வைத்தார் நடிகை அதிதி மேனன்!

Bookmark and Share

தீவுத் திடலில் பொருட்காட்சி... தொடங்கி வைத்தார் நடிகை அதிதி மேனன்!

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் கடந்த 42 வருடங்களாக சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை சென்னை தீவுத்திடலில் நடத்தக்க வருகிறது. இந்த வருட 43வது இந்திய சுற்றுலா பொருட்காட்சி மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்கள் மறைந்துவிட்ட காரணத்தினாலும், வர்தா புயல் மற்றும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்களினாலும் காலதாமதமாக திறக்கப்பட்டுள்ளது.

இந்த வருட பொருட்காட்சி FUN WORLD & RESORTS INDIA PVT. LTD என்ற நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்படுகிறது. இப்பொருட்காட்சியில் அசையும் விலங்குகளின் பிரம்மாண்டமான கண்காட்சி முதன்முறையாக சென்னையில் இடம் பெற்றுள்ளது.

இதனை கடந்த மாதம் வெளிவந்த பட்டதாரி படத்தின் கதாநாயகி அதிதி மேனன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இவர் ஆர்யா நடிப்பில் அமீர் இயக்கத்தில் உருவாகும் 'சந்தன தேவன்' படத்தில் இரு கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார். நிகழ்ச்சியில் புழல், திருட்டு விசிடி படங்களின் நாயகன் மனோவும் பங்கேற்றார்.

பொருட்காட்சியில் நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.25/- ம் சிறுவர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவியருக்கு ரூபாய் 15/- ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பொருட்காட்சி திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் , ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை தினங்களில் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் திறந்திருக்கும்.

இப்பொருட்காட்சி 70 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டு வருகின்ற ஏப்ரல் இரண்டாவது வாரம் வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Post your comment





Related News
தமன்னா நடிக்கும் கௌதம் மேனன் படத்திற்கு இப்படி ஒரு டைட்டிலா?
அட அது நான் இல்லைங்க, எஸ்கேப் ஆன கௌதம் மேனன்
தாக்குதலால் அதிர்ச்சியில் உறைந்த பிரபல நடிகர்! உயிர் தப்பிய சம்பவம்
கார்த்திக் நரேனின் ரசிகன் நான்! இயக்குனர் கௌதம் மேனன்
நான் சாகவில்லை... உயிரோடு காபி குடிச்சிட்டு இருக்கேன் - சுரேஷ் மேனன்
Breaking: செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ் தேதியில் மாற்றம்
அட அவரும் இல்லையாம் – தொடர்ந்து குழப்பம் எனை நோக்கி பாயும் தோட்டா!
விஜய்யின் 61வது படத்தை பற்றிய அப்டேட்- அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எங்கு தெரியுமா?
கன்னடத்தில் அஜித்தின் என்னை அறிந்தால் ரிலீஸ் எப்போது தெரியுமா?
அரவிந்த் சாமி படம்! கவுதம் மேனன் உறுதி செய்தார்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions