ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட அதுல்யா ரவி

Bookmark and Share

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட அதுல்யா ரவி

‘காதல் கண் கட்டுதே’ படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் அதுல்யா ரவி. இப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் கவரப்பட்டது. மேலும் இவருக்கு அதிக ரசிகர்களும் கிடைத்தனர். தற்போது இவரது நடிப்பில் ‘ஏமாலி’ என்ற படம் உருவாகி உள்ளது. இதில் சாம் ஜோன்ஸ், சமுத்திரக்கனி, பால சரவணன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். வி.இசட்.துரை இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதை பார்த்த அதுல்யாவின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். இந்த டீசரில் அதுல்யா ரவி ஆடையைக் கழற்றுவது போலவும், படுத்திருக்கும் நிலையிலுமான காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. இதற்கு ரசிகர்கள் பலர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும் அதுல்யா சிகரெட் பிடிக்கும் காட்சியும் படத்தின் டீசரில் இடம்பெற்றிருந்தது.

முதல் படத்தில் ஹோம்லியாக நடித்துவிட்டு இப்போது இப்படியான நடிப்பில் இறங்குவது தவறு என்கிற வகையில் ரசிகர்கள் பலரும் தங்களது விமர்சனங்களை வைத்திருந்தனர். ஒரு பக்கம் அதுல்யாவுக்கு ஆதரவாகவும் பலர் குரல் கொடுத்து வந்தனர்.

இது குறித்து அதுல்யா ரவி கூறும்போது, ‘உங்களது நேர்மறையான ஊக்கத்திற்கு நன்றி. படத்தின் டீசரை வைத்தே படத்தையும், கதாபாத்திரத்தையும் முடிவு செய்யாதீர்கள்.

படத்தில் பாஸிட்டிவான கேரக்டரில்தான் நான் நடித்திருக்கிறேன். படத்தில் அந்தக் கதாபாத்திரத்திற்கு நான் நியாயமாகத் தான் நடித்திருக்கிறேன் எனக் கூறியுள்ளார். ரசிகர்கள் எதிர்பார்த்திராத காட்சிகள் வந்ததற்கு மிகவும் வருந்துகிறேன்’ என்றார்.


Post your comment





Related News
`டிக் டிக் டிக்' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
சிம்புவின் அந்த படம் ஓடாதுனு எனக்கு அப்பவே தெரியும் - பிரபல இயக்குனர் பரபரப்பு பேட்டி.!
அரவிந்த் சாமி படத்தில் இணைந்த ஆண்ட்ரியா
`நரகாசூரன்' படக்குழுவில் இணைந்த அரவிந்த்சாமி
ஜெயம்ரவியின் டிக் டிக் டிக் படத்தின் முக்கிய அறிவிப்பு!
என் அடுத்த படம் முழுக்க கவர்ச்சி தான் இருக்கும் - என்ன படம்? யார் சொன்னது தெரியுமா?
முடிவுக்கு வந்த AAA பட பிரச்சனை- யார் காரணம் தெரியுமா?
வனமகன் படம் எப்படியுள்ளது, வெளிவந்த தகவல்
‘வனமகன்’ படத்துக்காக இயக்குனர் விஜய் என்னை பிழிந்துவிட்டார்: ஜெயம் ரவி
1 ரூபாய் கூட வாங்காமல் விஜய்காக நடிக்க தயார்: ஜெயம் ரவி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions