தளபதிக்காக நான் வெயிட்டிங்! - ராஜா ராணி அட்லி

Bookmark and Share

தளபதிக்காக நான் வெயிட்டிங்! - ராஜா ராணி அட்லி

பிரமாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக பணியாற்றியவர் அட்லி. அதையடுத்து அவரது தயாரிப்பிலேயே ராஜா ராணி என்ற படத்தை ஆர்யா-நயன்தாரா-ஜெய்-நஸ்ரியா ஆகியோரை வைத்து இயக்கினர்.

அந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பை கமல்ஹாசன் தொடங்கி வைத்தார். அந்த படமும் ஹிட்டாகியது.

அதனால் அதையடுத்து உடனடியாக தனது அடுத்த படத்தை அட்லி இயக்குவார் என்று பார்த்தால் சில மாதங்களாக எந்தவித அறிவிப்பும் வரவில்லை.

அதன்பிறகுதான் விஜய்யிடம் அவர் சொன்ன கதை ஓகே வாகி விட்டதாகவும், அடுத்த படத்தை விஜய்யை வைத்தே அட்லி இயக்குகிறார் என்றும் அதிகாரப்பூர்வமான செய்திகள் வெளியாகின.

ஆக, இரண்டாவது படத்திலேயே விஜய்யை இயக்கும் அளவுக்கு பெரிய இயக்குனராகி விட்ட அட்லி, சில மாதங்களுக்கு முன்புதான, நான் மகான் அல்ல படத்தில் கார்த்தியின் தங்கையாகவும், சிங்கம் படத்தில் அனுஷ்காவின் தங்கையாகவும் நடித்த ப்ரியாவை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், தேனிலவு கொண்டாட்டங்களை முடித்து விட்டு தற்போது மீண்டும் விஜய் பட வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்.

தற்போது சிம்புதேவன் இயக்கும் புலி படத்தில் தீவிரமாக நடித்துக்கொண்டிருக்கும் விஜய், அந்த படத்தை எப்போது முடிப்பார். எப்போது அட்லியின் இயக்கத்தில் நடிப்பார் என்பது போன்ற செய்திகள் மட்டும் சஸ்பென்சாகவே உள்ளன.

ஆனால், இதுகுறித்து டைரக்டர் அட்லியிடம் கேட்டால், தளபதிக்காக நான் வெயிட் பண்ணிக்கொண்டிருக்கிறேன் என்று மட்டும் பதில் கொடுத்து விட்டு நழுவிச்சென்று விடுகிறார்.


Post your comment





Related News
தளபதி 63 - அறிமுக பாடலில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்
தென்னிந்திய மொழிகளில் முதல்முறையாக விஜய் படத்திற்காக மெனக்கிடும் ஏ.ஆர்.ரஹ்மான்
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக விஜய் இவ்வளவு கஷ்டப்பட்டாரா..? யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா..?
பயங்கரமா.மாஸா பண்ணனும்..! தளபதி 63 பற்றி முதல் முறையாக அட்லீ அதிரடி பேட்டி..!
மெர்சல் போலவே வெளிநாட்டில் சாதனை படைத்த படம்! தலை சுற்ற வைத்த வசூல் - பலே பலே
விஜய்-அட்லீ அடுத்தப்படம் குறித்து வந்த சுவாரஸ்ய தகவல்
பிரபல விருதுவிழாவில் பேவரைட் ஹீரோ உட்பட ஒட்டுமொத்த விருதையும் வென்ற தளபதியின் மெர்சல்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions