கோலிவுட் இயக்குனர்களை அதிர வைத்த அட்லீ!

Bookmark and Share

கோலிவுட் இயக்குனர்களை அதிர வைத்த அட்லீ!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் பாசறையில் இருந்து வந்து ஆர்யா-ஜெய்-நயன்தாரா-நஸ்ரியா நடித்த ராஜா ராணி படத்தை இயக்கியவர் அட்லீ. ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய மெளனராகம் படத்தின் ரீமேக் போன்ற கதை என்றபோதும் படம் வெற்றி பெற்றதால், அடுத்து விஜய்க்கே கதை சொல்லி ஓகே பண்ணி விட்டார் அட்லீ.

விஜய் கால்சீட் கிடைத்ததால் வருடக்கணக்கில் அவருக்காக காத்திருந்த அட்லி, அந்த கேப்பில் தான் காதலித்த நடிகை ப்ரியாவையும் கல்யாணம் செய்து கொண்டார். தற்போது விஜய் படத்தை இயக்கும் வேலைகளில் பரபரப்பாக இறங்கி விட்டார்.

மேலும், தமிழ் சினிமா டைரக்டர்கள் அதிகப்படியான சம்பளம் வாங்குபவர் ஷங்கர் என்றால், அவரது உதவியாளரான அட்லீயோ வளர்ந்து வரும் டைரக்டர்களில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனராகியிருக்கிறார்.

அதாவது விஜய் படத்தை இயக்குவதற்கு அட்லீக்கு மூன்றரை கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சேதி கோலிவுட்டில் பரவியதை அடுத்து இரண்டாவது படத்திலேயே பல கோடி சம்பளமா? என்று இளவட்ட டைரக்டர்களும், பல படங்கள் இயக்கியும் இன்னும் ஒரு கோடியையே பார்க்காத இயக்குனர்களும் வாயை பிளந்து நிற்கின்றனர்.


Post your comment





Related News
ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக விஜய் இவ்வளவு கஷ்டப்பட்டாரா..? யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா..?
பயங்கரமா.மாஸா பண்ணனும்..! தளபதி 63 பற்றி முதல் முறையாக அட்லீ அதிரடி பேட்டி..!
மெர்சல் போலவே வெளிநாட்டில் சாதனை படைத்த படம்! தலை சுற்ற வைத்த வசூல் - பலே பலே
விஜய்-அட்லீ அடுத்தப்படம் குறித்து வந்த சுவாரஸ்ய தகவல்
பிரபல விருதுவிழாவில் பேவரைட் ஹீரோ உட்பட ஒட்டுமொத்த விருதையும் வென்ற தளபதியின் மெர்சல்..!
விஜய்யின் மெர்சல் தோல்விப்படமா? உண்மையை உடைத்த பிரபல தயாரிப்பாளர்
விஜய்க்கு ராசியான நாள் எது தெரியுமா? மீண்டும் அந்த நாளை பின்தொடருவாரா!
உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - நடிகர் விஜய் பெயர் பரிந்துரை
என்ன பன்றது இவர் ஷங்கரின் உதவியாளர் ஆச்சே!
விஜய் 63 இயக்குனர் இவர்தான்? தயாரிப்பு நிறுவனம் பற்றி புதிய தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions