குருநாதர் ஷங்கரை காப்பியடிக்கும் அட்லி

Bookmark and Share

குருநாதர் ஷங்கரை காப்பியடிக்கும் அட்லி

விஜய் தற்போது அட்லி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பை அறிமுக பாடல் மற்றும் சில சண்டைக் காட்சிகளுடன் தொடங்கினர். சென்னை ஈசிஆர் சாலையில் இந்த படப்பிடிப்புகள் நடைபெற்றது. 

இந்நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பை நடத்துவதற்காக கோவா மற்றும் சீனாவுக்கு படக்குழுவினர் பயணமாக உள்ளனர். அட்லியின் குருநாதரான இயக்குனர் ஷங்கர், ‘ஐ’ படத்தின் சில காட்சிகளை சீனாவில் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் படமாக்கினார். அதேபோல், இப்படத்தின் சில காட்சிகளையும் சீனாவில் படமாக்க அட்லி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இப்படப்பிடிப்பில் விஜய், சமந்தா உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். ஏற்கெனவே, சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பிலும் சமந்தா கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் சமந்தா ஹாஸ்டலில் தங்கி படிக்கும் காலேஜ் பெண்ணாக நடிக்கிறார். 

மேலும், பிரபு, கே.எஸ்.ரவிக்குமார், ராதிகா சரத்குமார், மொட்டை ராஜேந்திரன், அழகம் பெருமாள், காளி வெங்கட், பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்டோரும் நடித்து வருகிறார்கள்.

ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இது ஜி.வி.பிரகாஷுக்கு 50-வது படமாகும். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.


Post your comment





Related News
ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக விஜய் இவ்வளவு கஷ்டப்பட்டாரா..? யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா..?
பயங்கரமா.மாஸா பண்ணனும்..! தளபதி 63 பற்றி முதல் முறையாக அட்லீ அதிரடி பேட்டி..!
மெர்சல் போலவே வெளிநாட்டில் சாதனை படைத்த படம்! தலை சுற்ற வைத்த வசூல் - பலே பலே
விஜய்-அட்லீ அடுத்தப்படம் குறித்து வந்த சுவாரஸ்ய தகவல்
பிரபல விருதுவிழாவில் பேவரைட் ஹீரோ உட்பட ஒட்டுமொத்த விருதையும் வென்ற தளபதியின் மெர்சல்..!
விஜய்யின் மெர்சல் தோல்விப்படமா? உண்மையை உடைத்த பிரபல தயாரிப்பாளர்
விஜய்க்கு ராசியான நாள் எது தெரியுமா? மீண்டும் அந்த நாளை பின்தொடருவாரா!
உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - நடிகர் விஜய் பெயர் பரிந்துரை
என்ன பன்றது இவர் ஷங்கரின் உதவியாளர் ஆச்சே!
விஜய் 63 இயக்குனர் இவர்தான்? தயாரிப்பு நிறுவனம் பற்றி புதிய தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions