
சினிமாவில் கதாநாயகியாக வேண்டும் என்று கடும் முயற்சி எடுத்து வந்தவர் பிரியா. ஆனால் அவருக்கு கிடைத்ததோ தங்கை வேடங்கள் தான். நான் மகான் அல்ல படத்தில் கார்த்தியின் தங்கையாகவும், சிங்கம் படத்தில் அனுஷ்காவின் தங்கையாகவும் நடித்தார்.
அதையடுத்து சினிமா சரியாக ஒர்க் அவுட்டாகாததால் பிரியாவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர். அந்த சேதி அப்போது ராஜா ராணி படத்தை இயக்கியிருந்த டைரக்டர் அட்லியின் கவனத்துக்கு வந்ததை அடுத்து, பிரியாவை தான் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக விருப்பம் தெரிவித்தார்.
ஏற்கனவே பிரியா குடும்பத்தினருடன் அட்லிக்கு நட்பு இருந்ததால் அவர்களும் சம்மதம் தெரிவிக்க தெறி படத்தை இயக்க வெயிட்டிங்கில் இருந்து வந்த அட்லி, அந்த இடைவெளியில் பிரியாவை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், தற்போது விஜய்யை வைத்து தெறி படத்தையும் கிட்டத்தட்ட இயக்கி முடித்துவிட்டார் அட்லி. மேலும், தெறி படப்பிடிப்பு பிசியாக நடந்து வந்தபோது, மனைவி பிரியாவின் பிறந்த நாளை கொண்டாடியிருக்கிறார் அட்லி.
முன்னதாக, பிரியாவுக்கு பிடித்தமான பரிசுகளை வாங்கிக்கொடுத்தவர், அவருக்கு அந்த பிறந்தநாளை மறக்க முடியாத நாளாக மாற்ற வேண்டும் என்பதற்காக, அவரை லொகேசன் பார்க்க அழைத்து செல்வது போல் காரில் கூட்டிச்சென்று ஒரு படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த ஏரியாவுக்கு சென்றாராம். அங்கே கபாலி படத்துக்காக ரஜினி நடித்துக்கொண்டிருந்தாராம். அதைப்பார்த்த பிரியா துள்ளிக் குதித்தாராம்.
காரணம் அவர் ரஜினியின் தீவிரமான ரசிகையாம்.பிரியாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே முன்பே ரஜினியிடம் விசயத்தை சொல்லிவிட்டு, மனைவியை கூட்டிச்சென்றிருக்கிறார் அட்லி.
அதையடுத்து ரஜினியின் காலில் விழுந்து பிரியா ஆசீர்வாதம் வாங்க, அவரும் மனதார பிரியாவை வாழ்த்தி அனுப்பினாராம். அதை இப்போதுவரை சொல்லி என் பிறந்த நாட்களில் ரஜினி சாரை சந்தித்த பிறந்தநாள் மறக்க முடியாதது என்று சொல்லி வருகிறார் பிரியா அட்லி.
Post your comment