ஒரே நேரத்தில் இரண்டு படங்களை தயாரிக்கும் அட்லி

Bookmark and Share

ஒரே நேரத்தில் இரண்டு படங்களை தயாரிக்கும் அட்லி

இயக்குனர் அட்லி தயாரிப்பில் முதன்முதலாக உருவாகியுள்ள ‘சங்கிலி புங்கிலி கதவத்தொற’ படத்தின் பாடல்கள் நேற்று வெளியானது. இப்படத்தின் பாடல்களை கமல்ஹாசன் வெளியிட்டார். ஜீவா, ஸ்ரீதிவ்யா, கோவை சரளா, சூரி, தம்பி ராமையா, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை ஐக் என்பவர் இயக்கியுள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். 

இந்நிலையில், சங்கிலி புங்கிலி கதவத்தொற ஆடியோ ரிலீசுக்கு முன்னதாக அட்லி திடீரென பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் தன்னுடைய தயாரிப்பில் உருவாகவிருக்கும் மேலும் 2 படங்கள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி, ஒரு படத்தை அட்லியின் நண்பரும், எழுத்தாளர் பாலகுமாரனின் மகனுமான சூர்யா பாலகுமாரன் இயக்குகிறார். இப்படத்தில் நிவின்பாலி ஹீரோவாக நடிக்கிறார். இன்னொரு படத்தை அட்லியின் உதவியாளர் அசோக் இயக்கவிருக்கிறார். இப்படங்களின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும், ஜுன் மாதத்திற்குள் அவர்களை தேர்வு செய்துவிட்டு, அந்த மாதத்திலேயே படப்பிடிப்பையும் தொடங்கவிருக்கிறார்களாம். 

அட்லி தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘சங்கிலி புங்கிலி கதவத்தொற’ படம் மே 19-ந் தேதி வெளியாகவிருக்கிறது. அட்லி இயக்கிவரும் விஜய்-61 தீபாவளிக்கு வெளிவரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
எது தான்யா உங்க சொந்த படம்? - அட்லீயை அப்செட்டாக்கிய தல ரசிகர்கள்.!
மெர்சல் பிரச்சனை தீர்ந்து வெளிவருமா? - விஜய் மேனேஜர் பரபரப்பு பேட்டி.!
ஒரு சூப்பர் ஸ்டாராக இருந்து அப்படி ஒரு வார்த்தை வருது கஷ்டம்- விஜய்யை புகழ்ந்த அட்லீ
இந்தியாவிலேயே நம்பர் 1- மெர்சல் படைத்த இமலாய சாதனை
பிறந்தநாள் பரிசாக தளபதியின் மெர்சல் பட இரண்டாவது போஸ்டர் இதோ..
போஸ்டரில் விஜய் பெயரை பார்த்தீங்களா? மெர்சல் பட டைட்டிலில் ஒளிந்திருக்கும் மர்மங்கள்!
இளைய தளபதி இனி இல்லை- புது பட்டத்துடன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்
இளைய தளபதி விஜய்யின் மெர்சல் டைட்டில் சொல்ல வருவது இதுதான், கவனித்தீர்களா?
விஜய் குறித்து அட்லீ உருக்கமான கருத்து
விஜய் 61வது படம் இந்த இரண்டு படங்களை போல் இருக்குமாம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions