அட்லீக்கு அடித்த அதிர்ஷ்டம்!

Bookmark and Share

அட்லீக்கு அடித்த அதிர்ஷ்டம்!

ராஜா ராணி வெற்றியைத் தொடர்ந்து அடுத்த படத்திலேயே விஜய்யுடன் இணைந்தார் அட்லீ. அப்படம் இரண்டு தினங்களில் ரிலீஸ் ஆகவுள்ளது. ராஜா ராணியின் காட்சியமைப்பும், கதையுமென அப்படத்தை ரசிக்காத மக்களே இருக்க மாட்டார்கள்.

இந்நிலையில் சமீபத்திய புதுத் தகவலாக அட்லி தெலுங்கு பிரின்ஸ் மகேஷ் பாபுவுக்கு கதை சொல்லி ஓகே வாங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் மகேஷ் பாபுவை ஹைதரபாத்தின் பிரம்மோத்சவம் படத்தின் படப்பிடிப்பில் சந்தித்த அட்லீ அவருக்கு கதை சொல்லியுள்ளார். அதைக் கேட்ட மகேஷ் பாபு மிகவும் ஈர்க்கப்பட்டு படத்தில் நடிக்கவும் ஆர்வம் காட்டியுள்ளாராம். ரொமான்ஸ் - ஆக்‌ஷன் கலந்த கதையாக அட்லீ சொல்லியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜா ராணி முடித்த கையோடு அட்லீக்கு தெலுங்குப் படங்களை இயக்கும் வாய்ப்புகள் பல வந்தன. எனினும் விஜய் படத்தின் நிறைவுக்காகக் காத்திருந்தார்.

அதே சமயம் விஜய்க்கும் மீண்டும் ஒரு கதை சொல்லி சம்மதம் வாங்கியுள்ளதாகச் சொல்லப்படும் நிலையில் தெலுங்கு மாஸ் ஹீரோ மகேஷ் பாபு, தமிழ் மாஸ் ஹீரோ விஜய் யார் படம் அடுத்து? எனக் கேள்விகள் உருவாகியுள்ளன. பார்க்கலாம்!

 


Post your comment





Related News
அட்லீக்கு இப்படியொரு ஆசையா? - சாத்தியமா இது?
படப்பிடிப்பு தளத்தில் விஜய் இப்படி ஒரு வேலையை செய்வார்- சுவாரஸ்ய தகவல் கூறிய நித்யா மேனன்
தளபதி விஜயிடம் மன்னிப்பு கேட்ட அந்த மெர்சல் பொண்ணு யார் தெரியுமா? - போட்டோ உள்ளே.!
இதுலயும் மெர்சல் டீஸர் தான் உலகில் நம்பர் 1 - இப்படி பண்ணிட்டாங்களே?
ஆந்திராவிலும் பிரமாண்டமாக வெளியாகும் தெறி!
தெறி இசை விழாவில் ரசிகர்களுக்கு மற்றுமொரு ஸ்பெஷல் விருந்து!
பிப்ரவரி 26 முதல் திரையில் தோன்றும் விஜய்யின் ‘தெறி’
அரசியல் கதையைக் கொண்டு உருவாகும் தெறி 2!
தெறி டீசரால் விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம்
விஜய்யின் தெறி டீசரை தெறிக்கவிட்ட ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions