அட்லீயின் அடுத்த படத்தில் விஜயா? பிரபாஸா? - வெளிவந்த உண்மை தகவல்.!

Bookmark and Share

அட்லீயின் அடுத்த படத்தில் விஜயா? பிரபாஸா? - வெளிவந்த உண்மை தகவல்.!

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர்களில் முன்னணி இயக்குனராக விளங்கி வருபவர் அட்லீ, இவர் இயக்கிய அனைத்து படங்களிலும் இமாலய வெற்றியை பெற்று வருகின்றன.

தளபதி விஜயை வைத்து இயக்கிய தெறி, மெர்சல் என இரண்டு படங்களும் மெகா ஹிட்டாகின, இந்த படங்களை அடுத்து மீண்டும் தளபதி விஜயை இயக்க வேண்டும் என்ற ஆசை அட்லீக்குள் இருந்து கொண்டே தான் இருக்கிறது.

இதனையடுத்து சமீபத்தில் அட்லீ அடுத்த படத்தில் பிரபாஸை இயக்க போகிறார் என ஒரு தகவல் வேகமாக பரவி வந்தது, அதுமட்டுமில்லாமல் அடுத்த படத்திலும் தளபதி விஜயையே இயக்க போகிறார் எனவும் கூறப்பட்டு வந்தது.

 தற்போது இந்த செய்திகளுக்கு அட்லீ தரப்பில் இருந்து பதில் கிடைத்துள்ளது, அட்லீ தற்போது கதை உருவாக்கும் பணியில் இருக்கிறார், பிரபாஸை இயக்குவதாக வந்த செய்தியில் உண்மை இல்லை என மறுத்துள்ளனர். இதனால் அடுத்த படத்திலும் விஜயை இயக்குவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions