தெறி பாடல்கள் செம ஹிட்: கொண்டாடும் ரசிகர்கள்

Bookmark and Share

தெறி பாடல்கள் செம ஹிட்: கொண்டாடும் ரசிகர்கள்

மார்ச்  20ந்தேதி வெளியிடப்பட்ட தெறி திரைப்படத்தின்  பாடல்கள் செம ஹிட். தமிழகம் முழுவதும் ரசிகர்கள் தெறி பாடலைக் கொண்டாடி வருகின்றார்கள்.

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், பிரபு, இயக்குநர் மகேந்திரன், ராதிகா உள்ளிட்டவர்கள்  நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம்  தெறி.  

இந்தப்படத்தின் தலைப்பு வெளியிட்டதில் இருந்து படம் விமர்சனங்களை கொடுத்தது.  அஜித்தின் வீரம் திரைப்படத்தின் வசனத்தை விஜய் படத்தின் பெயராக வைத்தார்கள் என அப்போது பேசப்பட்டது. ஆனால்  தெறி படக்குழு எதையும் கவனத்தில் கொள்ளாமல்,  தனது வேலையை துவங்கியது.   

விஜய்-அட்லீ முதன் முறையாக இணையும் படம் என்பதை  கடந்து  இசையமைப்பாளர்  ஜி.வி.பிரகாஷிற்கு   50வது படமும் கூட. இந்த காரணங்களாலேயே  தெறி படத்தின் பாடல்கள் பல எதிர்பார்ப்புகளை உருவாக்கியது.

இந்தப் படம்  ஏப்ரல் 14 அன்று  திரைக்கு வர உள்ளநிலையில், மார்ச் 20-ம் தேதி  பாடல்கள் வெளியிடப் பட்டன. படத்தில்  7 பாடல்களில் ஒரு பாடலை கவிஞர் புலமைப்பித்தன் எழுதியுள்ளார்.

தேவா, டி.ஆர்  உள்ளிட்டோர்  தலா ஒரு பாடலைப் பாடியுள்ளார்கள்.  இந்தப்படத்தில் வரும் செல்லக் குட்டி பாடலை விஜய் பாடியுள்ளார். இவையில்லாமல்,  ஜித்து ஜில்லாடி  என குத்து பாடலும்,  தேவாவின் குரலில் ’போற வர பொண்ணுங்கள தொட்ட, உன் கைய உடைச்சு போட்ருவா புத்தூரு கட்டு’ என்கிற  ஃபோக் சாங் இருக்கிறது.  

இந்தப் பாடல் ஹிட் கொடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில்,  இந்தப் படத்தில் வரும் ஈனாமீனா டீகா எனும் பாடல்,  அஜித்திற்கு உனக்கென்ன வேணும் சொல்லு பாடல் டைப்பில் வெளியாகியிருப்பதாக சொல்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.  

சைந்தவியுடன் ஹரிஹரன் இணைந்து பாடியுள்ள டூயட் பாடல் காதலர்களுக்குப் பிடித்த பாடலாக இருக்கிறது என சொல்கிறார்கள். சமீபகாலமாக விஜய் நடித்த படங்களில் கண்டிப்பாக விஜய், ஒருபாடலை பாடிவிடுவார், அந்த வகையில்  இந்தப் படத்தில்  செல்லக்குட்டி  எனும் பாடலை  பாடியுள்ளார்.

மதுரையில் விஜய் ரசிகர்கள் தெறி பாடல் கேசட்டுகளை வாங்குவதை, கேக் வெட்டி கொண்டாடினார்கள்.  அவர்கள்,   தெறி பட பாடல்களில் மெலடி ரசிகர்களை மிகவும் கவரும் வகையில் வந்துள்ளது.  எதிர்பாரத என் ஜீவன், தாய்மை மற்றும் ஈன மீனா டீசா சர்ப்ரைஸ் விருந்தாக அமைந்துள்ளது. மொத்தத்தில் தெறி படம் தமிழகத்தை தெறிக்க வைக்கும் என்கிறார்கள்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாளில் தெறி படத்தின் மொத்தப் பாடல்களையும் கிட்டத்தட்ட 50லட்சம் வரையிலான பார்வையாளர்கள் பார்த்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.

கூடவே  நேற்று இரவு சுமார் 7 மணிக்குமேல் யு டியூபில் வெளியிடப்பட்ட தெறி  டிரைலர் தற்போது வரை 12,54,573 ஹிட்ஸ்களையும், 1,28,692 லைக்குகளையும் பெற்றுள்ளது சாதனை  என்கிறார்கள்.


Post your comment





Related News
தல-59 படத்தை தயாரிக்கும் ஐடியா இல்லை, அது வதந்தி தான் - பிரபல தயாரிப்பாளர் அதிரடி விளக்கம்.!
அஜித் 59 அப்டேட், இயக்குனர், தயாரிப்பாளர் இவரா? - வெளிவந்த மாஸ் தகவல்.!
தெறி ஆடியோ ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தெறி டப்பிங் பணிகளை முடித்த சமந்தா!
அஜித்தை தொடர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் விஜய்!
ரசிகர்களுடன் நடிகர் விஜய் ரகசிய ஆலோசனை!
2015 இல் விஜய்!
சென்னையை மீட்போம் - எமிஜாக்ஸன் நன்றிக்கடன்
விஜய்யின் "தெறி" இறுதிகட்ட படப்பிடிப்பில்
தெறி வார்த்தையை வேதாளம் படத்தில் பயன்படுத்தியது யார்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions