அட்லீ படத்தில் விஜய்க்கு ஜோடி சமந்தா - எமி?

Bookmark and Share

அட்லீ படத்தில் விஜய்க்கு ஜோடி சமந்தா - எமி?

விஜய்யின் ஒவ்வொரு படம் ஆரம்பிக்கும்போதும் அவருக்கு ஜோடியாக நடிக்கப் போவது யார் என்ற கேள்வியோடு மீடியாவில் கொஞ்ச நாளைக்கு செய்தி வரும்.

கிட்டத்தட்ட அரை டஜன் பாலிவுட் - கோலிவுட் நாயகிகளின் பெயர்களை வைத்து மீடியா பரபரத்துக் கொண்டிருக்க, அதற்கு சம்பந்தமே இல்லாமல் வேறு ஒரு நாயகியை அறிவிப்பார்கள்.

சிம்பு தேவன் படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கப் போகும் அவரது 59வது படத்தின் நாயகிகள் யார் யார் என்று இப்போது வழக்கத்தை விட அதிகமாக எழுதப்பட்டு வருகிறது.

இந்தப் படத்தில் முதலில் நயன்தாரா நடிப்பார் என்றார்கள். பின்னர் இதனை நயன்தாராவே மறுத்துவிட்டார்.அடுத்து சோனாக்ஷி சின்ஹா மற்றும் தீபிகா படுகோன் நடிப்பார்கள் என்றார்கள்.

இப்போது அந்த இருவரும் வேறு தமிழ்ப் படங்களில் நடிப்பதாக இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.விஜய்யுடன் ஜோடி சேரப் போகிறார்கள் என இப்போது கூறப்படுபவர்கள் எமி ஜாக்ஸன் மற்றும் சமந்தா.

சமந்தா ஏற்கெனவே கத்தியில் விஜய்யுடன் டூயட் பாடிவிட்டார். எமிதான் புதுவரவு. இந்த இருவராது இறுதித் தேர்வாக இருக்குமா.. தொடருமா.. பார்க்கலாம்!


Post your comment





Related News
பாக்ஸ்ஆபிஸில் புதிய மைல்கல்லை கடந்த மெர்சல்! ரசிகர்கள் கொண்டாட்டம்
மெர்சல் எந்தெந்த இடத்தில் எத்தனை கோடி வசூலித்துள்ளது - முழு விவரம்
மெர்சல் ப்ரோமோவை ஏன் அங்க வெளியிட்டீங்க? - கேள்வி எழுப்பும் ரசிகர்கள்.!
மெர்சல் ரசிகர்களை எவ்வளவு நேரம் மிரள வைக்கும் தெரியுமா? - சூப்பர் தகவல்.!
மெர்சல் தடை என்னவானது? தலைப்பில் மாற்றமா? - நீதிமன்ற தீர்ப்பு இதோ.!
தள்ளி போகிறதா மெர்சல் ரிலீஸ், காரணம் என்ன? - வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்.!
மெர்சல் எப்படி இருக்கும்? எந்த சீன் செம மாஸ்? - ரகசியங்களை உடைத்த அட்லீ.!
மீண்டும் மிக பெரிய சிக்கலில் சிக்கிய மெர்சல் - அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.!
தெலுங்கிலும் சாதனை குவிக்கும் மெர்சல் - விவரம் உள்ளே !
அந்த ஏரியாலேயே மெர்சல் முதல் நாள் இவ்வளவு வசூல் செய்யுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions