தெறியில் நடக்காதது இந்த முறையாவது நடக்குமா – அட்லி முயற்சி!

Bookmark and Share

தெறியில் நடக்காதது இந்த முறையாவது நடக்குமா – அட்லி முயற்சி!

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இயக்குனர்களில் முக்கியமானவர் அட்லி. ராஜா ராணி, தெறி படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக இவர் விஜய்யுடன் இன்னொரு படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியிலிருந்து தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் காமெடியனாக நடிக்க வைகைப்புயல் வடிவேலுவிடம் படக்குழு பேசி வருகிறது. தெறி படத்திலேயே வடிவேலுதான் நடிக்க வேண்டி இருந்தது.

ஆனால் பின்னர் கதாபாத்திரம் வலுவாக இல்லை என கூறி அவர் விலகினார். எனவே வடிவேலுவுடன் இணையவேண்டும் என்கிற அட்லியின் முயற்சி இதிலாவது நிறைவேறுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions