மீண்டும் அட்லியுடன் மெகா பட்ஜெட்டுடன் இணையும் விஜய்

Bookmark and Share

மீண்டும் அட்லியுடன் மெகா பட்ஜெட்டுடன் இணையும் விஜய்

விஜய்-அட்லி கூட்டணியில் வெளிவந்த ‘தெறி’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. வசூல் அளவில் மிகப்பெரிய சாதனைகளை படைத்தது. இந்நிலையில், இந்த கூட்டணி மீண்டும் எப்போது இணையும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அதன்படி, இருவரும் மீண்டும் இணையப் போவதாக செய்திகளும் வெளிவந்தது. ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமலேயே இருந்தது. 

இந்நிலையில், ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ஒரு படத்தில் விஜய் நடிக்கவுள்ளதாகவும், அந்த படத்தை அட்லி இயக்கப்போவதாக அதிகாரப்பூர்வமான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஏற்கெனவே, ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் 100-வது படத்தை இயக்கும் சுந்தர்.சி. படத்தில் விஜய்யை நடிக்க வைக்க ஏற்பாடுகள் நடைபெற்றது.

ஆனால், அந்த படத்துக்காக அதிக நாட்கள் கால்ஷிட் ஒதுக்கவேண்டும் என்று கேட்டதால், விஜய் அதிலிருந்து விலகிவிட்டதாக கூறப்பட்டது. தற்போது, அதே தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் மற்றொரு படத்தில் விஜய் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக வந்துள்ள செய்திகள் அனைவருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. 

விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் ‘பைரவா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் ‘தெறி’ கூட்டணி இணைவது விஜய் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. a


Post your comment





Related News
பயங்கரமா.மாஸா பண்ணனும்..! தளபதி 63 பற்றி முதல் முறையாக அட்லீ அதிரடி பேட்டி..!
அட்லீயின் அடுத்த படத்தின் ஹீரோ இவர் தானா? - மாஸ் கூட்டணி.!
மெர்சல் படத்தின் கதைக்காக இவருக்கு இவ்வளவு சம்பளமா? - அதிர வைக்கும் தகவல்.!
அட்லீக்கு இத்தனை கோடி சம்பளமா?
இயக்குனர் அட்லீக்கு வந்த மிக பெரிய சிக்கல் – அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
என்னுடைய அடுத்த படமும் விஜயுடன் தான் - அட்லீ அதிரடி.!
தமிழகத்தில் மைல் கல்லை தகர்த்த மெர்சல், தமிழ் சினிமா வரலாற்றிலேயே 3-வது படம்- வசூல் முழுவிவரம்
மெர்சல் கதை இது தானா? - வைரலாகும் லீக் தகவல்.!
மெர்சல் போஸ்டரால் அட்லீயை கலாய்க்கும் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
தளபதி ரசிகர்கர்களே வெள்ளி கிழமை தெறிக்க விட தயாராகுங்கள் - என்ன ஸ்பெஷல்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions