
தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மெர்சல் படம் உலகம் முழுவதும் தீபாவளி சரவெடியாக வெளிவர உள்ளது, இந்த படத்திற்காக தளபதி ரசிகர்களை தாண்டி அனைவரிடமும் மிக பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில் தற்போது மெர்சல் படத்தின் கதை இது தான் என ஒரு தகவல் வைரலாகத் தொடங்கியுள்ளது. அது என்னவென்றால் விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தில் மருத்துவராக உள்ள விஜய் பணியின் சார்பாக அமெரிக்கா செல்ல அங்கு மாஜிக் மேன் விஜயை சந்திக்கிறாராம்.
பின்னர் இவர்கள் இருவரும் சகோதரர்கள் என தெரிய வருகிறது, மேலும் இவர்கள் தலைவர் விஜய்க்கு பிறந்த இரட்டை குழந்தைகள் எனவும் தெரிய வருமாம். அந்த இரட்டை குழந்தையில் ஒரு குழந்தையை அப்பா விஜய் ராஜஸ்தானில் உள்ள ஒருவருக்கு கொடுத்து விடுவாராம், மேலும் வில்லனான எஸ்.ஜே.சூர்யா ஊருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ள அதை அப்பா விஜய் எதிர்ப்பதால் எஸ்.ஜே.சூர்யா இவரை கொன்று விடுவாராம்.
மற்றொரு குழந்தையை கோவை சரளா கொண்டு போய் வளர்ப்பார் என கூறப்படுகிறது, அப்பாவின் கொலைக்கான உண்மைகள் சகோதரர்களான இரண்டு விஜய்க்கும் தெரியவர அதன் பின் என்ன நடக்கிறது என்பது மீதி கதை என கூறப்படுகிறது.
இந்த கதை எந்த அளவிற்கு உண்மை என்பதை படம் வெளிவரும் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Post your comment