தெறி இசை விழாவில் அட்லி பேசியது என்ன?

Bookmark and Share

தெறி இசை விழாவில் அட்லி பேசியது என்ன?

அட்லி இயக்கத்தில் ‘இளையதளபதி’ விஜய் நடித்திருக்கும் தெறி படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய இயக்குனர் அட்லி படம் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை வெளியிட்டார். அவை இங்கே:

“சினிமாவில் மகேந்திரன் சார் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். அவரே என்னை இங்கு வாழ்த்தி பேசியது என் வாழ்நாளில் மறக்கமுடியாதது”

“ஜில்லா சமயத்திலே விஜய் சாரிடம் கதை சொல்லிவிட்டேன். அவருக்கு இடையில் சில கமிட்மென்ட்ஸ் இருந்ததால் என்னையும் வேறு படம் பண்ண சொன்னார். ஆனால் நான் காத்திருந்து இதை இயக்கினேன்”

“விஜய் சாரிடம் கதை சொல்ல சென்றபோது சங்கீதா மேடம், ‘எப்படியாவது இதை ஓகே பண்ணிடுங்க’ன்னு நம்பிக்கை கொடுத்தாங்க. அவங்களுக்கு என் ராஜா ராணி ரொம்ப புடிக்கும்”

“சின்ன பொண்ணுதான். ஆனா ஒரே ஷாட்ல கலக்கிட்டு போயிடுவா நைனிகா”

“சமந்தா இந்த படத்துல ‘மித்ரா’ன்ற ரோல்ல கிழிச்சிட்டாங்க”

“என் நண்பன் ஜி.வி.பிரகாஷ் அவன் 50-வது படம் என்னுடன் தான் என்றான். நான், ‘அப்போ வா விஜய் சாருடன் பண்ணுவோம்’ என்றேன்”

“இது அரசியல் சார்ந்த படமோ அல்லது சர்ச்சையான படமோ அல்ல. இது குழந்தை வளர்ப்பு பற்றிய ஆக்ஷன் படம்”

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions