விமர்சனங்களுக்கு அஞ்சாத அட்டகத்தி தினேஷ்!

Bookmark and Share

விமர்சனங்களுக்கு அஞ்சாத அட்டகத்தி தினேஷ்!

அட்டகத்தி படத்தில் வழக்கமான ரோலில் நடித்தபோதும், குக்கூ படத்தில் பார்வை இல்லாதவராக நடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார் தினேஷ். அதனால் புதுவரவு நடிகர்களில் தினேசுக்கு ஒரு தனி இடம் கிடைத்தது.

இவரை அழுத்தமான கதாபாத்திரங்களிலும் நடிக்க வைக்கலாம் என்ற நம்பிக்கை டைரக்டர்களுக்கு ஏற்பட்டது. அதேபோல், தினேசும், தன்னைத்தேடி வரும் படங்களையெல்லாமே ஏற்றுக்கொள்வதும் இல்லை.

முதலில் கதையை துருவி துருவி கேட்பவர், அதில் நடிப்பது பற்றி உடனே முடிவும் சொல்வதில்லை. ஒரு ரெண்டு நாள்ல சொல்றேன் என்று சொல்லிவிட்டு, அந்த கதையை தனது சகாக்களுடன் டிஸ்கஸ் பண்ணுகிறார்.

அதில் ஒரு உடன்பாடு வந்தால் மட்டுமே அந்த படங்களில் நடிக்க எஸ் சொல்கிறார். இல்லையேல் தயவுதாட்சன்யம் இன்றி நோ சொல்லி விடுகிறார். இதனால் தினேஷிடம் கதை சொல்லிவிட்டு திரும்பிய சில இயக்குனர்கள் தங்களுக்கு சாதகமான பதிலை அவர் சொல்லாததால் விமர்சித்துக்கொண்டு வருகின்றனர்.

ஆனால் இதுபற்றி தினேஷ் கூறுகையில், எப்பவுமே ஒரு கதையை நாம் நிராகரித்தால் சம்பந்தப்பட்ட டைரக்டர்கள் பீல் பண்ணத்தான் செய்வார்கள். அதையெல்லாம் நாம் பொருட்படுத்தக்கூடாது.

கதை பிடித்திருந்தால் மட்டுமே நடிக்க வேண்டும். எனக்கே பிடிக்காத கதை எப்படி ரசிகர்களுக்கு பிடிக்கும். அதனால் கதை விசயத்தில் நான் எப்போதுமே ரொம்ப கவனமாக இருப்பேன்.

மற்றவர்கள் பீல் பண்ணுவார்கள் என்று பிடிக்காத கதையில் நடித்தால், பின்னர் அந்த படம் தோல்வியடைந்து நான் பீல் பண்ணிக்கொண்டு இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்கிறார்.


Post your comment





Related News
மாமியாராக மாறிய தேவயானி
தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..!
அஜீத்தின் "ஜி" முதல் "வடசென்னை" வரை பவன்....
தர லோக்கல் கதாபாத்திரத்தில் மேக்கப் இல்லாமல் நடித்த மகிமா
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
ரஜினி-கமலை ஆதரிக்க மாட்டேன், தினகரனை ஆதரிப்பேன் - அட்டகத்தி தினேஷ் பேட்டி
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
'அண்ணனுக்கு ஜே ' திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு
தெலுங்கில் பிசியாக இருக்கும் நந்திதா
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions