என் பெயரில் டுவிட்டரில் மோசடி: அட்டகத்தி தினேஷ்

Bookmark and Share

என் பெயரில் டுவிட்டரில் மோசடி: அட்டகத்தி தினேஷ்

‘அட்டகத்தி’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தினேஷ். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டது. இதிலிருந்து தினேஷை அட்டகத்தி தினேஷ் என்றே அழைத்து வருகின்றனர். இப்படத்தை தொடர்ந்து ‘குக்கூ’, ‘திருடன் போலீஸ்’, சமீபத்தில் வெளியான ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

சமீபகாலமாக நடிகர்கள், நடிகைகள் சமூக வலைதளங்களில் இணைந்து அதில் புகைபடங்கள் மற்றும் தன்னுடைய நிகழ்வுகளை பகிர்வதில் ஆர்வம் காண்பித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று தினேஷ், சமூக வலைதளமான டுவிட்டரில் இணைந்துள்ளார் என்ற செய்தி வெளியானது. இதை தினேஷ் மறுத்துள்ளார்.

இது பற்றி தினேஷ் கூறும்போது, சமூக வலைதளமான டுவிட்டரில் என் பெயரில் மோசடி நடந்துள்ளது. என்னுடைய புகைப்படத்தை வைத்து போலியான டுவிட்டர் கணக்கை தொடங்கியுள்ளனர். அதை நம்பாதீர்கள் என்றார். தினேஷ் நடிப்பில் ‘வாராயோ வெண்ணிலாவே’, ‘விசாரணை’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது. 


Post your comment





Related News
மாமியாராக மாறிய தேவயானி
தர லோக்கல் கதாபாத்திரத்தில் மேக்கப் இல்லாமல் நடித்த மகிமா
ரஜினி-கமலை ஆதரிக்க மாட்டேன், தினகரனை ஆதரிப்பேன் - அட்டகத்தி தினேஷ் பேட்டி
'அண்ணனுக்கு ஜே ' திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு
தெலுங்கில் பிசியாக இருக்கும் நந்திதா
ஒரு குப்பைக் கதை படம் என் வாழ்கையில் ஒரு திருப்புமுணை நடிகர் கிரண் ஆர்யா
விஜய் அப்படி சொன்னது தேசிய விருது வாங்கினது போல இருக்கு - நெகிழும் பிரபல நடிகர்.!
விஜய்யின் ஹிட் பாடலுக்கு குத்தாட்டம் போடும் தினேஷ் கார்த்திக்- வைரலாகும் வீடியோ!
தினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமிதாப் பச்சன்
வாழ்க்கை எனக்கு நிறைய விஷயங்களை கற்று தந்துள்ளது – "உள்குத்து" நடிகர் தினேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions