விசாரணையை எதிர்பார்க்கும் அட்டகத்தி தினேஷ்!

Bookmark and Share

விசாரணையை எதிர்பார்க்கும் அட்டகத்தி தினேஷ்!

தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம் படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். அதன்பிறகு சிம்புவை வைத்து வடசென்னை என்றொரு படத்தை இயக்குவதாக இருந்தார். ஆனால், அந்த முயற்சி கைவிடப்பட்டது.

அதையடுத்து, படம் இயக்குவதில் இறங்காத வெற்றிமாறன், உதயம் என்எச்4, நான் ராஜாவாகப்போறேன், காக்கா முட்டை, பொறியாளன் போன்ற படங்களில் தயாரிப்பாளராக, வசனகர்த்தாவாக தனது பங்களிப்பை செலுத்தி வந்தார்.

இந்நிலையில், மீண்டும் தனுஷை வைத்து சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சூதாடி என்ற படத்தை இயக்குவதாக தெரிவித்தார். ஆனால் அந்த படம் நடந்து கொண்டிருந்தபோதே திடீரென்று அட்டகத்தி தினேஷ், கயல் ஆனந்தியை ஜோடி சேர்த்து விசாரணை என்ற படத்தை தொடங்கினார்.

தனது முதல் இரண்டு படங்களைப்போன்று இந்த படத்திலும் தனது தனித்துவத்தை காண்பிக்க வேண்டும் என்று முழுவீச்சில் விசாரணை பட வேலைகளில் ஈடுபட்டிருந்த வெற்றிமாறன், கடந்த மாதத்தில் படப்பிடிப்பை முடித்தவர் இப்போது இறுதிகட்ட பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்.

இந்த படத்தில் கதையும், கதாபாத்திரமும் அட்டகத்தி தினேஷை பெரிய அளவில் பாதித்துள்ளதாம். அதனால், இந்த படத்தில் நடித்து முடிக்கிற வரை அக்கம் பக்கம் கவனத்தை சிதற விடாமல் நடித்த அவர், இந்த படம் அட்டகத்தி, குக்கூ, திருடன் போலீஸ், தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் என தான் நடித்த படங்களில் இருந்து மாறுபட்டு தன்னை அடுத்த தளத்துக்கு கொண்டு செல்லும் படமாக அமையும் என்று எதிர்பார்க்கிறாராம்.

அதோடு, இந்த படத்திற்கு பிறகு சினிமாவில் எனக்கு வேறொரு இமேஜ் ஏற்பட்டு, என்னை அழுத்தமான கதைகளுக்கு புக் பண்ணுவார்கள் இயக்குனர்கள் என்கிறார் தினேஷ். 

 


Post your comment





Related News
மாமியாராக மாறிய தேவயானி
தர லோக்கல் கதாபாத்திரத்தில் மேக்கப் இல்லாமல் நடித்த மகிமா
ரஜினி-கமலை ஆதரிக்க மாட்டேன், தினகரனை ஆதரிப்பேன் - அட்டகத்தி தினேஷ் பேட்டி
'அண்ணனுக்கு ஜே ' திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு
தெலுங்கில் பிசியாக இருக்கும் நந்திதா
ஒரு குப்பைக் கதை படம் என் வாழ்கையில் ஒரு திருப்புமுணை நடிகர் கிரண் ஆர்யா
விஜய் அப்படி சொன்னது தேசிய விருது வாங்கினது போல இருக்கு - நெகிழும் பிரபல நடிகர்.!
விஜய்யின் ஹிட் பாடலுக்கு குத்தாட்டம் போடும் தினேஷ் கார்த்திக்- வைரலாகும் வீடியோ!
தினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமிதாப் பச்சன்
வாழ்க்கை எனக்கு நிறைய விஷயங்களை கற்று தந்துள்ளது – "உள்குத்து" நடிகர் தினேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions