படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய அட்டக்கத்தி தினேஷ்!

Bookmark and Share

படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய அட்டக்கத்தி தினேஷ்!

‘அட்டக்கத்தி’ படத்தின் மூலம் கதாநாயகனாக உருவெடுத்தவர் தினேஷ். இந்த படத்தின் மூலம் இவரது பெயருக்கு முன் ‘அட்டக்கத்தி’ என்ற பெயரும் ஒட்டிக்கொண்டது. தமிழ் சினிமாவில் இவரை பலரும் ‘அட்டக்கத்தி’ தினேஷ் என்றே அழைத்து வருகின்றனர்.

இவருக்கு இன்று பிறந்தநாளாகும். இவர் தனது பிறந்தநாளை தற்போது நடித்து வரும் ‘கபாலி’ படக்குழுவினருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார். இயக்குனர் பா.ரஞ்சித், கலையரசன் மற்றும் படக்குழுவினர் தினேஷுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறினர். தினேஷ் இப்படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்து வருகிறார்.

‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், ரித்விகா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். 


Post your comment





Related News
தர லோக்கல் கதாபாத்திரத்தில் மேக்கப் இல்லாமல் நடித்த மகிமா
ரஜினி-கமலை ஆதரிக்க மாட்டேன், தினகரனை ஆதரிப்பேன் - அட்டகத்தி தினேஷ் பேட்டி
தெலுங்கில் பிசியாக இருக்கும் நந்திதா
விசாரணையை எதிர்பார்க்கும் அட்டகத்தி தினேஷ்!
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தி 50 நாள் ஆனது
என் பெயரில் டுவிட்டரில் மோசடி: அட்டகத்தி தினேஷ்
தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்; படத்திற்கு யு சான்றிதழ்
உள்குத்து படத்தின் மூலம் மீண்டும் இணையும் கார்த்திக் ராஜூ- அட்டகத்தி தினேஷ்
நண்பர்களுக்கு நன்றி சொல்லும் திருடன் போலீஸ் இயக்குனர்!
திருடன் போலீஸை வெளியிடும் தேனாண்டாள் ஃபிலிம்ஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions