இயக்குனரான ஆட்டோகிராப் மல்லிகா!

Bookmark and Share

இயக்குனரான ஆட்டோகிராப் மல்லிகா!

ஆட்டோகிராப் படத்தில் நடித்தவர் மல்லிகா. அதன்பிறகு திருப்பாச்சி படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்தார். பின்னர் குண்டக்க மண்டக்க, திருப்பதி, உனக்கும் எனக்கும், தோட்டா ஆகிய படங்களில் நடித்தார்.

அதையடுத்து தாய் மொழியான மலையாளப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்த மல்லிகா, நீண்ட இடைவேளைக்குப்பிறகு சென்னையில் ஒருநாள் படத்தில் தமிழில் என்ட்ரி கொடுத்தார்.

இந்நிலையில், தற்போது மலையாளத்தில் சில படங்களில் நடித்து வரும் மல்லிகா, சினிமா நடிகைகளுக்கு சமூகத்தில் இழைக்கப்பட்டு வரும் கொடுமைகளை சுட்டிக்காட்டும் வகையில் பழனியிலே கலகம் என்றொரு படம் இயக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

இந்த படத்தில் பாவனா நாயகியாக நடிக்கிறாராம். குறிப்பாக, சினிமாவில் தான் கண்ட விசயங்களையும், மற்ற நடிகைகள் சந்தித்த பிரச்னைகளையும் ஒன்று சேர்த்து கதை பண்ணியுள்ள மல்லிகா, சமீபகாலமாக மார்பிங் முறையில் நடிகைகளை ஆபாசமாக சித்தரித்து புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிட்டு வருவதால் நடிகைகள் எந்தெந்த வகையில் காயப்படுகிறார்கள் என்பதையும் இந்த படத்தில் முக்கிய கதைக்களமாக்கியிருக்கிறாராம். 

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions