அவம் படத்திற்காக பாடினார் கமல்

Bookmark and Share

அவம் படத்திற்காக பாடினார் கமல்

கமலஹாசன் தான் நடிக்கும் படம் தவிர மற்ற படங்களில் பாடுவது மிகவும் அபூர்வமாக நடக்கும் ஒரு நிகழ்வு. அப்படி ஒரு நிகழ்வு அவம் படத்தில் நடந்திருக்கிறது.

கவுரவ், கார்த்திக் வில்வா கிரீஷ், காவ்யா ஷெட்டி, நடித்துள்ள அவம் படத்தை விஜய் வில்வா கிரிஷ் இயக்கியுள்ளார். கே.எஸ்.சுந்தர மூர்த்தி இசை அமைத்துள்ளார்.

படத்திற்காக மதன் கார்க்கி "காரிருள்..." என்று துவங்கும் பாடலை எழுதினார். இதனை கமல் பாடினால் நன்றாக இருக்கும் என்று இயக்குனரும், தயாரிப்பாளரும் கருதி உள்ளனர்.

இசை அமைப்பாளர் சுந்தர மூர்த்தியின் தந்தை குமார் கமலை சந்தித்து மகன் இசையில் பாட வேண்டும் என்று வேண்டுகோள் வைக்க அதனை கமல் உடனே ஏற்று பாடிக் கொடுத்துள்ளார். அந்த பாடல் இன்று (மே 10) வெளியிடப்பட்டது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions