அடுத்த மாதம் விக்னேஷின் அவன்-அவள் ரிலீஸ்!

Bookmark and Share

அடுத்த மாதம் விக்னேஷின் அவன்-அவள் ரிலீஸ்!

புவனக்காடு படத்தையடுத்து விக்னேஷ் நாயகனாக நடித்துள்ள படம் அவன் அவள். இந்த படத்தை அவரே தயாரித்திருக்கிறார். ராம்கிருஷ் மிர்னாலி இயக்க, கார்த்திக்ராஜா இசையமைத்திருக்கிறார்.

இதில் விக்னேஷ்க்கு ஜோடியாக தேவிகா மாதவன், சந்திரிகா என்ற இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர். இப்படத்தில் ஒரு சைக்கோ வேடத்தில் விக்னேஷ் நடித்திருக்கிறார்.

இதுவரை பாசிட்டிவான வேடங்களாக நடித்து வந்த அவர் இந்த படத்தில் தனது வில்லத்தனமான நடிப்பை முழுமையாக வெளிப்படுத்தியிருக்கிறாராம். இப்படி விக்னேஷ் வித்தியாசமான கோணத்தில் தன்னை வெளிப்படுத்தியிருக்கும் இந்த படம் விற்பனைக்கு தயாராகி 6 மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது.

ஆனால் இன்னமும் விற்பனை ஆகவில்லை. அதனால் இதுவரை பொறுத்திருந்த விக்னேஷ், இனிமேலும் நாட்களை கடத்தினால் படத்துக்கான வேல்யூ குறைந்து விடும் என்பதால், இப்போது தானே படத்தை ரிலீஸ் செய்கிறாராம்.

முதலில் மே மாதத்தில் வெளியிட நினைத்தவர், பல பெரிய படங்கள் இந்த மாதத்தில் அணிவகுப்பதால், அடுத்த மாதம் அவன் அவள் படத்தை வெளியிடுவதற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறார்.

 


Post your comment





Related News
நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்
என் பெயரில் போலி பேஸ்புக், ட்விட்டர் - பிரியா பவானி சங்கர்
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
பயத்தினால் படப்பிடிப்பின் பாதியிலேயே ஓட்டம் எடுத்த நடிகை - "அவளுக்கென்ன அழகியமுகம்"
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் செல்ஃபி போட்டி
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions