தண்ணீருக்குள் எடுக்கப்படும் `அவதார்' படத்தின் அடுத்தடுத்த பாகங்கள்: ஜேம்ஸ் கேமரூன் அறிவிப்பு

Bookmark and Share

தண்ணீருக்குள் எடுக்கப்படும் `அவதார்' படத்தின் அடுத்தடுத்த பாகங்கள்: ஜேம்ஸ் கேமரூன் அறிவிப்பு

கடந்த 2009-ம் ஆண்டு வெளியாகி உலகமெங்கும் பிரம்மாண்ட வசூலைக் குவித்த படம் 'அவதார்'. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் 2.8 பில்லியன் டாலர்களை வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் வரலாற்று சாதனை படைத்தது. மேலும் `டைட்டானிக்' படத்தின் வசூல் சாதனையையும் 'அவதார்' முறியடித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து 'அவதார்' படத்தின் மேலும் 4 பாகங்கள் வெளியாகும் என ஜேம்ஸ் கேமரூன் அறிவித்திருந்தார். அதன்படி `அவதார் படத்தின் அடுத்த 4 பாகங்கள் எப்போது வெளியாகும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டிருந்தது. அதன்படி

`அவதார் 2' - டிசம்பர் 18 2020, `அவதார் 3' - டிசம்பர் 17 2021, `அவதார் 4' - டிசம்பர் 20 2024, `அவதார் 5' - டிசம்பர் 19 2025 தேதிகளில் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இப்படத்தில் `ஃபியர் தி வாக்கிங் டெட்'

படத்தில் நடித்த பிரபலம் கிளிஃப் கர்ட்டிஸ் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கர்ட்டிஸ் டோனாவோரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். மேலும் மெட்கயினா இனத்தின் தலைவரும் இவர் தான் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

`அவதார்' படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் (`அவதார்' உலகம்) தண்ணீருக்கு அடியில் இருப்பது போல காட்சிப்படுத்தப்பட இருக்கின்றன. அதற்காக ஆழ்கடலில் படத்தின் காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாக ஜேம்ஸ் கேமரூன் சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.


Post your comment





Related News
கலகலப்பு-2... இந்த தடவை ஹோட்டல் கிடையாது, இதுதான் - மனம்திறந்த சுந்தர்.சி
அம்மாடி ஜனவரி 26-ல் மட்டுமே இத்தனை படங்கள் ரிலீஸா?
சாமி-2 படத்தால் த்ரிஷாவுக்கு வந்த சிக்கல் - தயாரிப்பாளர் அதிரடி ட்வீட்.!
தளபதி-62 படம் எப்போது தொடங்கும்? - கசிந்தது சூப்பர் தகவல்.!
விஷால் படம் ஹிந்தி டப்பிங் மட்டுமே இத்தனை கோடி வியாபாரமா?
தளபதி-62 படத்தை பற்றிய முக்கியத் தகவலை கசிய கீர்த்தி சுரேஷ்.!
த்ரிஷா மனசு வைத்தால் மட்டுமே இனி சாமி-2 - அதிர்ச்சியில் படக்குழுவினர்.!
தளபதி-62 பாடல்கள் மற்றும் விஜய் பற்றிய சர்ப்ரைஸ் தகவலை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்.!
தளபதி-62 படத்தில் விஜயின் கதாபாத்திரம் குறித்து கசிந்த ரகசியம் - கொண்டாடும் தளபதியன்ஸ்.!
மலேசிய கலை நிகழ்ச்சியில் 2.O படத்தின் டீசர் வெளியீடா? - வெளிவந்த உண்மை.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions