ஹாலிவுட்டையும் விட்டு வைக்காத கதை திருட்டு: அவெஞ்சர்ஸ் இயக்குனரிடம் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு

Bookmark and Share

ஹாலிவுட்டையும் விட்டு வைக்காத கதை திருட்டு: அவெஞ்சர்ஸ் இயக்குனரிடம் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு

உலகெங்கும் பெரும் வரவேற்பை பெற்ற பிரபல ஹாலிவுட் படமான ‘அவெஞ்சர்ஸ்’ திரைப்படத்தின் இயக்குனர் ஜோஸ் வேடான் தனது கதையை திருடி விட்டதாக பிரபல எழுத்தாளர் ஒருவர் 10 மில்லியன் டாலர்(62 கோடியே 25 லட்சத்து 50,000 ரூபாய்) நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ‘தி கேபின் இன் தி வுட்ஸ்’ என்ற திகில் படத்தை பிரபல ஹாலிவுட் இயக்குனரான ஜோஸ் வேடான் எழுதி இயக்கினார். விடுமுறையைக் கொண்டாடுவதற்காக அடர்ந்த காட்டில் உள்ள மர-வீட்டிற்குச் செல்லும் 5 இளம் மாணவர்கள் (2 பெண்கள், 3 ஆண்கள்) மர்மமான முறையில் இறந்து ஜோம்பியாக (உயிர் பெற்ற பிணம்) மாறுவதுதான் படத்தின் கதை. பாக்ஸ் ஆபீசில் பெரும் ஹிட்டான இந்தப் படத்தின் திரைக்கதைக்காக ஜோஸ் வெகுவாகப் பாராட்டப்பட்டார்.

இந்த திரைப்படம் வெளியாவதற்கு 5 ஆண்டுகளுக்கு முன் பீட்டர் கல்லாகர் எழுதிய ‘தி லிட்டில் வைட் டிரிப்’ என்ற நாவல் வெளியானது. ‘தி கேபின் இன் தி வுட்ஸ்’ திரைப்படத்தில் உள்ள 25 காட்சிகள் தனது நாவலில் உள்ளபடியே இருப்பதாகவும், படத்தில் வரும் ட்விஸ்ட் கூட தன் நாவலில் இருந்து அப்பட்டமாக காப்பியடிக்கப்பட்டதாகவும் பீட்டர் கூறியுள்ளார்.

மேலும், கடந்த 13-ம் தேதி அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தை நாடி, படத்தின் இயக்குனர் ஜோஸ் மீதும் தாயாரித்த லயன்ஸ் கேட் நிறுவனத்தின் மீதும் வழக்கு தொடர்ந்துள்ளார். 


Post your comment





Related News
உலகையே அதிர வைத்த அவெஞ்சர் infinity war வசூல் - மிரள வைக்கும் விவரம் உள்ளே.!
22 சூப்பர் ஹீரோக்கள் ஒரு வில்லனோடு மோதும் அவேஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்!
வசூலில் 1200 கோடி அள்ளிய அவெஞ்சர்ஸ்-ஏஜ் ஆஃப் அல்ட்ரான்
வெளியான இரண்டே நாட்களில் 286 கோடிக்கும் மேல் வசூல் செய்த அவெஞ்சர்ஸ்-ஏஜ் ஆஃப் அல்ட்ரான்
ஹாலிவுட் படங்களுக்கும் தலைப்பு தட்டுப்பாடு
தமிழில் அவென்சர்ஸ் 2








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions