தமிழில் அவென்சர்ஸ் 2

Bookmark and Share

தமிழில் அவென்சர்ஸ் 2

அதீத சக்தி கொண்ட சூப்பர் மேன்கள்தான் ஹாலிவுட்டின் நிரந்தர ஹீரோக்கள். கேப்டன் அமெரிக்கா, ஹல்க், அயர்ன்மேன், தோர் உள்ளிட் சூப்பர் ஹீரோக்களின் படங்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கிறது.

இதனை பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான மார்வெல் தயாரிக்கிறது. தான் உருவாக்கிய அத்தனை சூப்பர் ஹீரோக்களையும் ஒரே படத்தில் கொண்டு வந்து மார்வெல் நிறுவனம் தயாரித்த அவென்சர்ஸ் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இதைத் தொடர்ந்து தற்போது அவென்ஜரின் இரண்டாம் பாகத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. ஏஜ் ஆஃப் அல்ட்ரான் என்பது இரண்டாம் பாகத்தின் டைட்டில். இதனை ஜோஸ் வேஹ்டன் இயக்கி உள்ளார்.

5 சூப்பர் ஹீரோக்களுடன் 15 ஹாலிவுட் நட்சதிரங்கள் இணைந்து நடித்துள்ளனர். உலகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த படத்தை வால்ட் டிஷ்னி ஸ்டூடியோ உலகம் முழுவதும் வெளியிடுகிறது. நேற்று (ஏப் 13) அமெரிக்காவில் வெளியானது. வருகிற 24ந் தேதி இந்தியாவில் வெளியாகிறது.

தமிழில் டப் செய்யப்பட்டுள்ளது. தமிழில் அல்ட்ரான் சகாப்தம் என்ற தலைப்பு வைத்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும், ஆங்கிலத்திலும், 3டி தொழில்நுட்பத்திலும் வெளிவருகிறது.


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
கூத்தன் படம் பார்ப்பவர்களுக்கு 18 பவுன் தங்கம்: அசரடிக்கும் தயாரிப்பாளர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions