ஏவிஎம் சீரியல்களில் தனித்துவம்!

Bookmark and Share

ஏவிஎம் சீரியல்களில் தனித்துவம்!

சமீபகாலமாக சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் டிஆர்பியை முன்வைத்தே நகர்த்தப்பட்டு வருகின்றன. எதிர்பார்த்தபடி டிஆர்பி கிடைக்கவில்லை என்றால், ஏற்கனவே முடிவு செய்த கதையில் அதிரடியான திருப்பங்களை உருவாக்கி கதையோட்டத்தையே மாற்றி வருகின்றனர்.

அந்த வகையில், பல சீரியல்களில் தவறான உறவுகள், ஆபாச வார்த்தைகள், புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற தவறான பழக்கவழக்கங்ளையும் சினிமாவுக்கு இணையாக காண்பித்து வருகிறார்கள்.

ஆனால், ஏவிஎம் நிறுவனத்தில் இருந்து தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் இந்த மாதிரியான விசயங்களை இணைப்பதே இல்லையாம். குறிப்பாக, கொடூரம், வக்ரம், ஆபாசம், வன்முறை, மது, புகைப்பிடித்தல் என எந்த விசயங்களையும் அவர்களது சீரியல்களில் வைப்பதற்கு அனுமதி கிடையாதாம்.

அதோடு, ஏவிஎம் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் அனைத்து சீரியல்களுமே ஏவிஎம் சரவணன் பார்வையிட்ட பிறகே சேனல்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறதாம். அப்படி அவர் பார்வையிடும்போது, ஏதாவது தவறான காட்சிகள், ஆபாச வார்த்தைகள் என தென்பட்டால் அதை கத்தரித்தே ஆக வேண்டும் என்று கூறுவாராம்.

மேலும், டிஆர்பியை உயர்த்த வேண்டும் என்பதற்காக தங்களது தரத்தை அவர்கள் ஒருபோதும் தாழ்த்திக்கொள்ள நினைப்பதில்லையாம்.

குறிப்பாக, தங்களது சீரியல்களில் செண்டிமென்ட், காமெடி, விழிப்புணர்வு போன்றவற்றை அதிகமாக சேர்த்துக்கொள்கிறார்களாம். இந்த மாதிரியான ஒரு தனி பாலிஸியுடன்தான் இதுவரை ஏவிஎம் நிறுவனத்தில் இருந்து சீரியல்கள் தயாரிக்கப்பட்டு வருகிறதாம்.


Post your comment





Related News
ஏவிஎம் சரவணன் எழுதிய நானும் சினிமாவும் நூல் வெளியீட்டு விழா
உழைப்பு நேர்மை என்றால் ஜெயலலிதா தான்: ஏவிஎம் சரவணன் புகழாரம்
ஏ.வி.எம்., ஸ்டூடியோ தொடர்ந்து செயல்படும்
பாயும் புலி தலைப்புக்கு ஏவிஎம் அனுமதி கொடுத்ததா?!
ஏவிஎம் நடத்தும் இசை கண்காட்சி
70&ம் ஆண்டில் ஏவி.எம்
ஏவிஎம் ஸ்டூடியோவை ரூ.400 கோடிக்கு வாங்குகிறது ஸ்ரீராம் புராப்பர்டீஸ்?
புதிய படத்தில் நடிகர் அர்ஜுனுடன் ஜோடி போடும் லட்சுமிராய்!
ஏ.வி.எம் நிறுவனத்தின் சின்னத்திரை சாதனை!
ரஜினியின் கோச்சடையானை வாங்க மறுத்த‌ ஏவிஎம்....?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions