ஏ.வி.எம்., ஸ்டூடியோ தொடர்ந்து செயல்படும்

Bookmark and Share

ஏ.வி.எம்., ஸ்டூடியோ தொடர்ந்து செயல்படும்

சென்னையில் உள்ள பழமையான ஏ.வி.எம்., ஸ்டூடியோ தொடர்ந்து செயல்படும் என அதன் நிர்வாக பங்குதாரர் எம்.எஸ்.குகன் தெரிவித்துள்ளார்.

காரைக்குடியில் 1945ல் துவக்கப்பட்ட ஏ.வி.எம்., ஸ்டூடியோ பின் சென்னையில் சாந்தோம் மற்றும் மயிலாப்பூரில் இயங்கி வந்தது. இதையடுத்து ஸ்டூடியோவை பெரிதாக்க நினைத்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார் 65 ஆண்டுகளுக்கு முன் வடபழனியில் தோப்பாக இருந்த இடத்தை வாங்கி ஸ்டூடியோவாக மாற்றினார்.

இந்நிலையில் மிகவும் பழமையான ஏ.வி.எம்., ஸ்டூடியோவில் பின் பகுதியில் உள்ள ஏசி படப்பிடிப்பு தளம் பஸ் ஸ்டாப் செட் மற்றும் கட்டடங்கள் இடிக்கப்பட்டன. அதனால் ஏ.வி.எம்., ஸ்டூடியோ மூடப்பட உள்ளதாக தகவல் வெளியானது.இதை ஸ்டூடியோ நிர்வாக பங்குதாரரான எம்.எஸ்.குகன் மறுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:ஏ.வி.எம்., ஸ்டூடியோவை என் தந்தை ஏ.வி.எம். சரவணனும் நானும் நிர்வகித்து வருகிறோம். இந்தியாவின் பழமையான ஸ்டூடியோவாக உள்ள ஏ.வி.எம். ஸ்டூடியோ தொடர்ந்து செயல்படும். ஸ்டூடியோ மூடப்படுவதாக கூறப்படுவது தவறான தகவல்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
ஏவிஎம் சரவணன் எழுதிய நானும் சினிமாவும் நூல் வெளியீட்டு விழா
உழைப்பு நேர்மை என்றால் ஜெயலலிதா தான்: ஏவிஎம் சரவணன் புகழாரம்
ஏவிஎம் சீரியல்களில் தனித்துவம்!
பாயும் புலி தலைப்புக்கு ஏவிஎம் அனுமதி கொடுத்ததா?!
ஏவிஎம் நடத்தும் இசை கண்காட்சி
70&ம் ஆண்டில் ஏவி.எம்
ஏவிஎம் ஸ்டூடியோவை ரூ.400 கோடிக்கு வாங்குகிறது ஸ்ரீராம் புராப்பர்டீஸ்?
புதிய படத்தில் நடிகர் அர்ஜுனுடன் ஜோடி போடும் லட்சுமிராய்!
ஏ.வி.எம் நிறுவனத்தின் சின்னத்திரை சாதனை!
ரஜினியின் கோச்சடையானை வாங்க மறுத்த‌ ஏவிஎம்....?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions