உழைப்பு நேர்மை என்றால் ஜெயலலிதா தான்: ஏவிஎம் சரவணன் புகழாரம்

Bookmark and Share

உழைப்பு நேர்மை என்றால் ஜெயலலிதா தான்: ஏவிஎம் சரவணன் புகழாரம்

உழைப்பு நேர்மை என்றால் ஜெயலலிதா தான் என தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் தெரிவித்துள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு காலமானார்.

ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு அரசியல் தலைவர்களும், பொது மக்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஜெயலலிதா குறித்து தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் கூறுகையில், தமிழகத்தில் மறக்க முடியாத பெயர் ஜெயலலிதா. நடிகையாக ஆரம்பித்து அதன் பிறகு அரசியலுக்கு வந்தவர்.

படத்தில் நடிக்கும்போதே அரசியல் தொடர்பான புத்தகங்கள் படிப்பது, அரட்டை அடிக்காமல் இருப்பது என தொழிலில் கவனம் செலுத்தியவர். இது மாதிரியான பெண்மணியை மீண்டும் பார்ப்பது கடினம். ஜான்சி ராணி போல இந்திரா காந்தி போல ஜெயலலிதா.

இவர் போன்ற ஒரு பெண்மணி இனிமேல் வருவது கடினம். அவருக்கு சமமானவரை சொல்ல முடியாது. உழைப்பு நேர்மை என்றால் ஜெயலலிதா தான். நல்ல திறமைசாலியான பெண். தமிழகத்திற்குப் பெரிய இழப்பு என்றார்.


Post your comment





Related News
ஏவிஎம் சீரியல்களில் தனித்துவம்!
ஏ.வி.எம்., ஸ்டூடியோ தொடர்ந்து செயல்படும்
பாயும் புலி தலைப்புக்கு ஏவிஎம் அனுமதி கொடுத்ததா?!
ஏவிஎம் நடத்தும் இசை கண்காட்சி
70&ம் ஆண்டில் ஏவி.எம்
ஏவிஎம் ஸ்டூடியோவை ரூ.400 கோடிக்கு வாங்குகிறது ஸ்ரீராம் புராப்பர்டீஸ்?
புதிய படத்தில் நடிகர் அர்ஜுனுடன் ஜோடி போடும் லட்சுமிராய்!
ஏ.வி.எம் நிறுவனத்தின் சின்னத்திரை சாதனை!
ரஜினியின் கோச்சடையானை வாங்க மறுத்த‌ ஏவிஎம்....?
ஏ.வி.எம். தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம்..?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions