அவ்னி மோடிக்கு ஸ்ட்ராபெரி கைகொடுக்குமா?

Bookmark and Share

அவ்னி மோடிக்கு ஸ்ட்ராபெரி கைகொடுக்குமா?

குஜராத்தை சேர்ந்த மாடல் அழகி அவ்னி மோடி. பிரதமர் நரேந்திர மோடியின் உறவுக்கார பெண் அல்ல. அவர் பிறந்த மோடி குலத்தைச் சேர்ந்தவர் அவ்வளவுதான். குஜராத்தி படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் பணம் கொழிக்கும் தெலுங்கு பட உலகம் பற்றி கேள்விப்பட்டு வந்தார்.

சர்வேஸ்வர் என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். அதன் பிறகு தமிழில் நான் ராஜாவாக போகிறேன் படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார். சிறிய இடைவெளிக்கு பிறகு சரத்குமார் நடிப்பில் வெங்கடேஷ் இயக்கிய சண்டமாருதம் படத்தில் நடிப்பதாக இருந்தார்.

பின்னர் திடீரென அந்தப் படத்திலிருந்து விலக்கப்பட்டார். இதற்கு என்ன காரணம் என்று தெரியாது. என்றாலும் வேடிக்கையான காரணம் ஒன்றை சொல்வார்கள்.

சண்டமாருதம் பட பூஜையின் போது பத்திரிகையாளர்களுக்கு  அளித்த பேட்டியில் அவ்னி மோடி, சும்மானாச்சுக்கும் பிரதமர் நரேந்திர மோடி என் தூரத்து சொந்தம் என்று சொல்லி வைக்க... மீடியாக்கள் நரேந்திர மோடி உறவினர் நடிக்கும் படம் என்று செய்திகள் வெளியிட்டது.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் சரத்குமார். அப்போது அ.தி.மு.கவும், பாரதிய ஜனதாக கட்சியும் எதிர்எதிர் திசையில் நின்றதால் அவ்னி மோடியை நடிக்க வைத்தால் அம்மாவின் கோபத்துக்கு ஆளாக நேரிடுமோ என்று பயந்து அவ்னி மோடியை நீக்கிவிட்டாக சொல்வார்கள்.

அதன் பிறகு குஜராத்தி படங்களுக்கே திரும்பி விட்ட அவ்னிமோடியை மீண்டும் அழைத்து வந்திருக்கிறார் பாடலாசிரியர் பா.விஜய். அவர் நடித்து இயக்கும் ஸ்ட்ராபெரி படத்தில் அவ்னி மோடிதான் ஹீரோயின்.

அழகான பிசாசாக நடித்திருக்கிறார், இந்தப் படம் தனக்கு தமிழில் நல்ல இடத்தை பெற்றுத் தரும் என்று நம்புகிறார் அவ்னிமோடி.


Post your comment





Related News
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
நடிகர் பிரகாஷ்ராஜை கொல்ல சதி! அதிர்ச்சி தகவல்
பண மதிப்பு நீக்கத்துக்காக பிரதமர் மன்னிப்பு கேட்பாரா? நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி
மோடியின் திட்டத்தை ஆதரித்ததற்காக மன்னிப்பு கேட்ட கமல்ஹாசன்
மோடி சொன்னதை தான் செய்தார் 'ரஜினி'.. எந்திரன் 2.0 படத்தில் இது தனிசிறப்பு..!
நான் நரேந்திர மோடியின் மகள்! பரபரப்பு ஏற்படுத்திய நடிகை
இப்ப பதில் சொல்லுங்கள்: ஆதாரத்தோடு மோடியை கேள்வி கேட்கும் கவுதமி #JusticeForAmma
ஜெயலலிதாவுக்காக தெருவில் போராட வேண்டுமா? கவுதமி கேள்வி
மோடியை சந்திக்காமல் சென்னை திரும்பிய விஷால்- என்னதான் நடந்தது
டெல்லியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக களமிறங்கிய நடிகர் விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions