ஆறு ஆண்டுகளை நிறைவு செய்யும் 'அயன்'

Bookmark and Share

ஆறு ஆண்டுகளை நிறைவு செய்யும் 'அயன்'

தமிழ்த் திரைப்பட உலகில் சூர்யாவை ஒரு முழுமையான கமர்ஷியல் ஹீரோவாக வசூல் ரீதியாகவும் அங்கீகரித்த படம் 'அயன்'. 'நேருக்கு நேர்' படத்தில் அறிமுகமான சூர்யாவுக்கு பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த 'நந்தா' படத்தில் நடித்த பிறகுதான் திரையுலகில் ஒரு திருப்பு முனை ஏற்பட்டது.

அதன் பிறகு வெளிவந்த 'காக்க காக்க' படம் சூப்பர் ஹிட்டாக ஓடினாலும், அந்தப் படத்தில் சூர்யாவை அப்படி மாற்றி நடிக்க வைத்த இயக்குனர் கௌதம் மேனனுக்குத்தான் பெயர் கிடைத்தது.

அடுத்து 'கஜினி' படத்தில் நடித்த போதும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுக்குத்தான் அதிகமான பெயர் கிடைத்தது. கூடவேதான் அந்த இரண்டு படங்களிலும் சூர்யாவின் நடிப்பைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்கள்.

ஆனால், சூர்யா தன்னுடைய தனித் திறமையால் இயக்குனரை விட தன்னை மட்டுமே முன்னிறுத்திப் பேச வைத்த படமாக கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த 'அயன்' படம் அமைந்தது.

இந்தப் படத்திற்குப் பின்னர்தான் சூர்யாவை தனித்து செயல்படக் கூடிய ஒரு முழுமையான கமர்ஷியல் ஹீரோவாக திரையுலகமும், ரசிகர்களும் அங்கீகாரம் செய்தார்கள்.

அதன் பின் அவர் நடித்த “ஆதவன், சிங்கம், 7ம் அறிவு, மாற்றான், சிங்கம் 2” ஆகீய படங்களில் சூர்யாவே முதன்மையாகப் பேசப்பட்டார். அப்படி சூர்யாவுக்கு ஒரு திருப்பு முனையைக் கொடுத்த 'அயன்' திரைப்படம் ஏப்ரல் 3ம் தேதி, 2009ம் ஆண்டு வெளியானது.

இன்றுடன் அந்தப் படம் ஆறு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இது குறித்து, சூர்யா படத்தின் தயாரிப்பாளர்களான ஏவிஎம் நிறுவனத்திற்கும், இயக்குனர் கே.வி.ஆனந்திற்கும், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், எழுத்தாளர்கள் சுபா மற்றும் 'அயன்' படக்குழுவினர், ரசிகர்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துள்ளார். சூர்யாவின் திரையுலக வாழ்க்கையில் 'அயன்' படம் ஒரு முக்கியமான மைல்கல்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions