கடலை போட பொண்ணு தேடும் அசார்!

Bookmark and Share

கடலை போட பொண்ணு தேடும் அசார்!

ரேடியோ ஜாக்கியாக இருந்து டி.வி. சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் அசார். விக்ரமன் இயக்கிய நினைத்தது யாரோ படத்தில் நடித்த முக்கியமான 4 கேரக்டர்களில் இவரும் ஒருவராக நடித்தவர்.

தற்போது சாரல், கடலை போட ஒரு பொண்ணு வேணும் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படங்களைப்பற்றி அசார் கூறுகையில், சாரல் படம் காதலை மையப்படுத்திய கதையில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கங்காரு படத்தில் நாயகியாக நடித்துள்ள பிரியங்கா எனக்கு ஜோடியாக நடிக்கிறார்.

மைனா, கும்கி, கயல் படங்கள் வரிசையில் ஒரு பியூர் காதல் கதையில் இப்படத்தின் கதை அமைந்திருக்கிறது. அதனால் திருமணம் ஆனவர்கள், திருமணம் ஆகாதவர்கள் என இரண்டுதரப்பினருக்கும் பிடித்தமான படமாக இது இருக்கும்.

அடுத்து, கடலை போட ஒரு பொண்ணு வேணும் என்ற படத்தில் நடிக்கிறேன். அதுவும் காதலை மையப்படுத்திய கதைதான். ஆனால் காமெடி ஆக்சன் கலந்த படம். ஆக்சனே காமெடியாக இருக்கும்.

இப்போதைய யூத் அந்த படத்தை ரொம்பவே ரசிப்பார்கள். அதனால் இந்த இரண்டு படங்களும் திரைக்கு வரும்போது தமிழ் சினிமாவில் எனக்கென்று ஒரு இடம் கிடைத்து விடும் என்று கூறிய அசாரிடம், சிவகார்த்திகேயன்தான் உங்கள் இன்ஸ்பிரேசனா? என்று கேட்டால். அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்கிறார்.

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்கனவே எனக்குள் இருந்தது. அந்த ஆசையினால்தான் சின்னத்திரைக்குள் என்ட்ரி ஆனேன். இப்போது சில ஆண்டு முயற்சிக்கு பிறகு நான் விரும்பிய சினிமாத்துறைக்குள் வந்திருக்கிறேன். இதில் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கமே பிரதானமாக உள்ளதால், எனக்கு பொருத்தமான கதைகளாக தேடிப்பிடித்து நடித்து வருகிறேன்.

மேலும், கடலை போட ஒரு பொண்ணு வேணும் படத்தில் நான் நடிப்பதை கேள்விப்பட்டு நண்பர்கள் என்னை கலாய்த்து வருகிறார்கள். இந்த படத்தை எடுத்துக்கொண்டால் காதலி இல்லாத ஒருவன் காதலியை தேடி அலையும் வேடம். எனக்கு அது சீரியசாக இருக்கும். ஆனால் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு காமெடியாக இருக்கும்.

அதனால் இப்போது நடித்து வரும் இரண்டு படங்களுமே வெற்றி பெறுவதற்கான அனைத்து அம்சங்களும் நிறைந்த படம் என்று சொல்லும் அசார், மேலும் இரண்டு படங்களில் நடிப்பதற்கும் கதை கேட்டிருக்கிறாராம். ஆக இந்த 2015ம் ஆண்டில் எனது நடிப்பில் 4 படங்கள் உருவாகிறது என்பதை நினைக்கும்போது ரொம்ப சந்தோசமாக உள்ளது என்று உற்சாகமாக சொல்கிறார் அசார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions