ரூ.1000 கோடியை எட்டி உச்சம் தொட்ட ‘பாகுபலி-2’

Bookmark and Share

ரூ.1000 கோடியை எட்டி உச்சம் தொட்ட ‘பாகுபலி-2’

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த ‘பாகுபலி-2’ இந்திய சினிமாவில் இதுவரை நிகழ்த்திய சாதனைகளையெல்லாம் தகர்த்தெறிந்து சென்று கொண்டிருக்கிறது. இப்படம் வெளியாகி 9 நாட்கள் ஆகியுள்ள நிலையிலும், திரையிட்ட அனைத்து திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாகவே ஓடிக்கொண்டிருக்கின்றன.

இதனால், இந்த படத்தின் வசூலும் இந்திய சினிமாவில் யாரும் நிகழ்த்த முடியாத சாதனையை சாதனையை பெற்றுள்ளது. படம் வெளியான 6 நாட்களிலேயே ரூ.800 கோடிக்கும் மேல் வசூலித்து இந்திய சினிமாவிலேயே அதிகமான வசூலை பெற்ற படம் என்ற சாதனையை பெற்றது. இதைத் தொடர்ந்து இப்படம் விரைவில் ரூ.1000 கோடியை எட்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. 

அந்த சாதனையையும் தற்போது பாகுபலி-2 நிகழ்த்தியுள்ளது. தற்போது 9 நாட்களில் இந்த படம் ரூ.1000 கோடியை எட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்திய சினிமாவிலேயே ரூ.1000 கோடியை எட்டிய முதல் படம் இதுதான் என்ற பெருமையை பெற்றுள்ளது.

இனிமேல், இந்தியாவில் வெளிவரும் படங்கள்கூட இந்த சாதனையை எட்டுமா? என்பது சந்தேகம்தான்.  


Post your comment





Related News
பாகுபலி 2 படக்குழுவினரின் அடுத்த டார்க்கெட் இதுதானாம்
யார் தான் உங்க பொண்டாட்டி?: பல்லாள தேவனே பதில் சொல்லிட்டார்
USA பாக்ஸ் ஆபிஸில் எத்தனையாவது இடத்தில் பாகுபலி 2 தெரியுமா?
தமிழில் 7 வருட சாதனையை முறியடித்து வீரநடை போடும் பாகுபலி 2!
கட்டப்பா வேடத்தில் சத்யராஜ் தவிர வேறு யாரும் இப்படி நடிக்க முடியாது: குஷ்பு பாராட்டு
`பாகுபலி' படத்திற்காக தன்னைத்தானே வருத்திக்கொண்ட ராணா
பாகுபலி 2 படத்தை அடுத்து ரூ. 1000 கோடி கிளப்பில் இணைய போகும் படம்- வேறலெவலில் இந்திய சினிமா
கதை முடிந்தது! பிரபாஸின் அறிவிப்பால் சோகத்தில் ரசிகர்கள்
"பாகுபலி போன்ற படத்தை எடுக்கமாட்டேன்.." சொல்வது ஆஸ்கர் விருது வென்ற பிரபலம்
பாகுபலி பட வாய்ப்பை நிராகரித்த 5 டாப் நடிகர்கள்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions