கட்டப்பா வேடத்தில் சத்யராஜ் தவிர வேறு யாரும் இப்படி நடிக்க முடியாது: குஷ்பு பாராட்டு

Bookmark and Share

கட்டப்பா வேடத்தில் சத்யராஜ் தவிர வேறு யாரும் இப்படி நடிக்க முடியாது: குஷ்பு பாராட்டு

‘பாகுபலி’, ‘பாகுபலி-2’ ரூ.1000 கோடி வசூல் குவித்து உலக சாதனை படைத்துள்ளது. முதல் பாகம் பாகுபலியை கட்டப்பா கொன்றது ஏன்? என்ற கேள்வியுடன் முடிந்தது. இதற்கான பதில் என்ன? என்பதே ‘பாகுபலி-2’.

இந்த படத்தின் இரண்டு பாகத்திலும் கட்டப்பாவாக நடித்த சத்யராஜ் மிகவும் பேசப்பட்டார். அவருடைய பாத்திரம்தான் 2-ம் பாகத்தின் முக்கிய அம்சமாக அமைந்தது. `பாகுபலி' கதையில் உயிரோட்டமே அவர்தான் என்று சொல்லும் அளவு சிறப்பான நடிப்பால் சத்யராஜ் அனைவரையும் கவர்ந்தார்.

கதையின் முக்கிய பாத்திரம் சத்யராஜ் என்பதால், அவரை வைத்து கர்நாடகாவில் பிரச்சினையை ஏற்படுத்தினார்கள். அது ‘பாகுபலி-2’க்கு அதிக விளம்பரத்தை கொடுத்தது. இந்த படத்தின் பிரமாண்டம். மற்ற நடிகர் - நடிகைகள் பற்றி பலரும் பாராட்டி இருக்கிறார்கள்.

இதில், சத்யராஜ் நடிப்பு பற்றி நடிகை குஷ்பு புகழ்ந்து இருக்கிறார். இது குறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ள குஷ்பு... ‘பாகுபலி' படத்தில் வரும் கட்டப்பா வேடத்தில் சத்யராஜ் சார் தவிர வேறு யார் நடித்தாலும் அவரைப் போல் இவ்வளவு சிறப்பாக நடித்திருக்க முடியாது.

இன்னொரு ரகசியம். அவருடன் நான் தான் அதிக படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


Post your comment





Related News
பிரபாஸ் உருவத்தை முதுகில் டாட்டூ குத்திய ரசிகை!
பாகுபலி-2வையே முந்தும் மெர்சல், பிரபல திரையரங்கம் அறிவிப்பு
USA பாக்ஸ் ஆபிஸில் எத்தனையாவது இடத்தில் பாகுபலி 2 தெரியுமா?
தமிழில் 7 வருட சாதனையை முறியடித்து வீரநடை போடும் பாகுபலி 2!
பாகுபலி 2 படத்தை அடுத்து ரூ. 1000 கோடி கிளப்பில் இணைய போகும் படம்- வேறலெவலில் இந்திய சினிமா
கதை முடிந்தது! பிரபாஸின் அறிவிப்பால் சோகத்தில் ரசிகர்கள்
"பாகுபலி போன்ற படத்தை எடுக்கமாட்டேன்.." சொல்வது ஆஸ்கர் விருது வென்ற பிரபலம்
ரூ.1000 கோடியை எட்டி உச்சம் தொட்ட ‘பாகுபலி-2’
பாகுபலி பட வாய்ப்பை நிராகரித்த 5 டாப் நடிகர்கள்
பாகுபலி புகழ் பிரபாஸின் அடுத்த படத்திற்கு இப்படி ஒரு சோதனையா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions