பாகுபலி- உண்மையான பட்ஜெட் 250 கோடி

Bookmark and Share

பாகுபலி- உண்மையான பட்ஜெட் 250 கோடி

எஸ்.எஸ்.ராஜமௌலியின் பிரம்மாண்டமான இயக்கத்தில் உருவாகி அடுத்த வாரம் வெளியாக இருக்கும் பாகுபலி படத்தின் உண்மையான பட்ஜெட் எவ்வளவு என்பது இதுவரை சரியாகத் தெரியாமலே இருந்தது.

இரண்டு பாகங்களில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் பட்ஜெட் 200 கோடி என்றும் 300 கோடி என்றும் ஒவ்வொவருவரும் விதம் விதமாக எழுதி வந்தனர். இதனிடையே சமீபத்தில் இந்தப் படத்தின் உண்மையான பட்ஜெட் 250 கோடி ரூபாய் என ராஜமௌலி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதலில் படத்தை ஒரே பாகமாகத்தான் எடுக்க திட்டமிட்டிருந்தார்களாம். ஆனால், கதையை அதற்குள் அடக்கி விட முடியாத காரணத்தால் அதன் பின் இரண்டு பாகமாக எடுக்கலாம் என மாற்றிவிட்டார்களாம். இப்போதைக்கு முதல் பாகத்திற்கான கடைசி நேர வேலைகள் பரபரப்பாக நடந்து வருகின்றன.

இன்னும் சில நாட்களில் படத்தின் முதல் காப்பியைத் தயாரித்து முடித்து விடுவார்களாம். இன்னும் அதிகாரப்பூர்வமாக ஜுலை 10ம் தேதிதான் படத்தின் ரிலீஸ் என அறிவிக்காமல் உள்ளனர்.

ஆனால், அன்று வெளியிடுவதற்கான அனைத்து வேலைகளும் ஏறக்குறைய முடிவடையும் நிலயில் உள்ளதாம். தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 400 திரையரங்குகளில் வெளியிடுவதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்கிறர்கள்.


Post your comment





Related News
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.!
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions