பாகுபலி-க்கு ஷாரூக் கான் பாராட்டு

Bookmark and Share

பாகுபலி-க்கு ஷாரூக் கான் பாராட்டு

ராஜமௌலியின் இயக்கத்தில் கடந்த மாதம் 10ம் தேதி வெளிவந்த  பாகுபலி படம் வெற்றிகரமாக 25வது நாளைக் கடந்திருக்கிறது. படம் வெளியான நாளில் இருந்து இன்று வரை பலரும் படத்தைப் பார்த்துப் பாராட்டி வருகிறார்கள்.

தென்னிந்தியத் திரையுலகத்தில் மட்டுமல்லாது, ஹிந்தித் திரையுலகத்திலும் இந்தப் படம் பாராட்டுக்களையும் வசூலையும் அள்ளி வருகிறது. சமீபத்தில் பாகுபலி படத்தைப் பார்த்துள்ள ஹிந்தித் திரையுலகின் முன்னணி நாயகனான ஷாரூக்கான் படம் பற்றி மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

“பாகுபலி எவ்வளவு கஷ்டப்பட்டு எடுக்கப்பட்டுள்ள படம். இந்தப் படத்தில் சம்பந்தப்பட்டுள்ள அனைவருமே ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.

நீங்கள் பாயத் தயாராக இருந்தால் நீங்கள் மட்டுமே வானத்தைத் தொடுவீர்கள்” என தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். ஷாரூக் கான் பாராட்டிற்கு படக் குழுவினர் பலரும் நன்றி தெரிவித்துள்ளனர்.

பாகுபலி படம் வெளிவந்த இந்த மூன்று வாரங்களில் உலகம் முழுவதும் இதுவரை சுமார் 470 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வார கடைசிக்குள் அது 500 கோடி ரூபாயைத் தாண்டி விடும் என்கிறார்கள்.

தமிழில் மட்டும் சுமார் 60 கோடி ரூபாய் வரை படம் வசூலித்துள்ளதாம். சில நாட்களுக்கு முன் சென்னைக்கு வந்த 'பாகுபலி' இயக்குனர் ராஜமௌலியும் சென்னையில் உள்ள திரையரங்கு ஒன்றில் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தார். 


Post your comment





Related News
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.!
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions