பாகுபலி படத்துக்கு வரிவிலக்கு கிடைக்குமா?

Bookmark and Share

பாகுபலி படத்துக்கு வரிவிலக்கு கிடைக்குமா?

இன்றைய தேதியில் இந்திய திரையுலகத்தையே திரும்பிப்பார்க்க வைத்துள்ள படம்  பாகுபலி தெலுங்குப்படம்தான். இந்திய சினிமாவரலாற்றிலேயே அதிக பொருட் செலவில் அதாவது சுமார் 250 கோடி பட்ஜெட்டில் தயாராகி வரும் பிரம்மாண்ட படம் இது.

ராஜ்மௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, சத்யராஜ், அனுஷ்கா, தமன்னா முதலானோர் நடித்துள்ள  பாகுபலி படம் வருகிற 10-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது.  தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் வெளியாகவிருக்கும் இப்படம் சமீபத்தில் தணிக்கைக் குழுவுக்குச் சென்றது.  

பாகுபலி படத்தை பார்த்த தணிக்கைக்குழு உறுப்பினர்கள்  பாகுபலி க்கு  யு/ஏ சர்டிஃபிகேட் வழங்கியிருக்கிறார்கள்.  யு/ஏ வழங்கப்பட்டதால் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மொழிகளில் படத்தை வெளியிடுபவர்களுக்கு பிரச்சனை ஒன்றுமில்லை.  

தமிழில்தான் வரிவிலக்கு பஞ்சாயத்து இருக்கிறது. எனவே  பாகுபலி படத்துக்கு யு/ஏ சர்டிஃபிகேட்  வழங்கப்பட்டதால்  இப்படத்தை தமிழகம் முழுக்க வெளியிடும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும், ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸும் கடும் அதிர்ச்சியில் இருக்கின்றதாம்.

யு சர்ட்டிஃபிகேட் கிடைப்பதுபோல் ரீ சென்சார் பண்ணலாமா என்ற ஆலோசனையும் நடப்பதாக தகவல் அடிபடுகிறது.

 


Post your comment





Related News
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.!
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions