கேரளாவில் முதன்முறையாக 4K முறையில் திரையிடப்படும் பாகுபலி

Bookmark and Share

கேரளாவில் முதன்முறையாக 4K முறையில் திரையிடப்படும்  பாகுபலி

வழக்கமாக தெளுங்குபடங்கள் கேரளாவில் ரிலீஸ் ஆகும்போது மலையாளத்தில் டப்பிங் செய்யப்பட்டு தான் ரிலீஸாவது வழக்கம். ஆனால் நாளை ரிலீஸாகும் பாகுபலி படம் தமிழ், தெலுங்கு என இருமொழிப்படமாக உருவாகியுள்ளதால் பெரும்பாலான தியேட்டர்களில் இந்தமுறை தமிழிலேயே திரையிடுகிறார்கள்.

மலையாள ரசிகர்களுக்கும் மலையாள டப்பிங்கில் பார்ப்பதைவிட தமிழில் பார்ப்பதில் தான் விருப்பம் அதிகம் என்கிறார் இந்தப்படத்தை கேரளாவில் திரையிடும் குளோபல் யுனைடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான பிரேம் குமார்.

அதுமட்டுமல்ல கேரளாவில் முதன்முறையாக 4K புரஜக்சன் முறையில் திரையிடப்படும் படமும் பாகுபலி தான். இதற்கு முன்னர் கடந்த மே மாதம் வெளியான பிரேமம் படம் 5K முறையில் எடுக்கப்பட்டிருந்தாலும் கூட, அந்த வடிவில் திரையிடுவதற்கான தியேட்டர்கள் இல்லையென்பதால் 2Kவுக்கு மாற்றப்பட்டு திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்ல திருவனந்தபுரத்தில் உள்ள ஏரிபிலக்ஸ் தியேட்டர்களில் மட்டும் 64 சேனல் டால்பி அட்மாஸ் சவுன்ட் சிஸ்டத்தில் 'பாகுபலி' ரிலீசாவதும் இன்னொரு சிறப்பு.. ஆக மலையாள ரசிகர்களுக்கு 'பாகுபலி' புதிய அனுபவத்தை தரும் என்பதில் சந்தேகமில்லை.


Post your comment





Related News
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.!
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions