
பாகுபலி திரைப்படம் வெற்றிகரமாக முதல் நாளைக் கடந்து விட்டது. உலகம் முழுவதும் நேற்று வெளியான இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் கண்டிப்பாக இந்தியத் திரைப்பட உலகில் ஒரு சாதனையை நிகழ்த்தும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
அதன் விவரங்கள் இனிமேல்தான் தெரிய வரும். கதைக்கு விருந்தோ இல்லையோ கண்களுக்கு இந்தப் படம் விருந்து என்றுதான் ஒட்டுமொத்த விமர்சனங்களும் இதுவரை வந்துள்ளன.
இதனிடையே இந்தப் படத்தின் சாட்டிலைட் தொலைக்காட்சி உரிமங்களின் மூலம் மட்டும் இதுவரை சுமார் 60 கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளதாகச் சொல்கிறார்கள். தெலுங்கில் இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமம் எப்போதோ கொடுக்கப்பட்டுவிட்டது.
அதன் விலை மட்டுமே 25 கோடி ரூபாய் என்கிறார்கள். தெலுங்குத் திரையுலக வியாபார வரலாற்றில் இது ஒரு சாதனை விலை என டோலிவுட்டே ஆச்சரியப்பட்டுப் போனது. அடுத்து சமீபத்தில் இந்தப் படத்தின் தமிழ்த் தொலைக்காட்சி உரிமையை முன்னணி டிவி ஒன்று சுமார் 8 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது என்றார்கள்.
அடுத்து ஹிந்தி தொலைக்காட்சி உரிமை மட்டும் சுமார் 17 கோடி ரூபாய் அளவிற்கு பிரபல தொலைக்காட்சி ஒன்றிற்கு விற்கப்பட்டுள்ளதாம். ஆக, முதல் பாகத்தின் செலவில் மூன்றில் ஒரு பங்கை தொலைக்காட்சி மூலம் அள்ளிவிட்டார்கள்.
Post your comment