பாகுபலி முதல் நாள் வசூல் எவ்வளவு ?

Bookmark and Share

பாகுபலி முதல் நாள் வசூல் எவ்வளவு ?

பாகுபலி திரைப்படம் சுமார் 4000 திரையரங்குகளில் உலகம் முழுவதும் நேற்று வெளியானது. முதல் நாள் வசூலாக மட்டும் சுமார் 50 முதல் 55 கோடி ரூபாய் வசூலித்திருக்க வாய்ப்புள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆந்திரா, தெலுங்கானாவில் மட்டும் சுமார் 25 கோடி ரூபாய் வசூலித்திருக்க வாய்ப்புள்ளதாகவும், தமிழ்நாட்டில் சுமார் 5 கோடி ரூபாய் வரையிலும் மற்ற இந்திய மாநிலங்களில் 10 கோடி ரூபாய் வரையிலும் வெளிநாடுகளில் 15 கோடி ரூபாய் வரையிலும் வசூலித்திருக்கும் என்கிறார்கள்.

அமெரிக்காவில் மட்டும் சிறப்புக் காட்சிகள் மற்றும் நேற்றைய காட்சிகளின் மூலம் மட்டும் 2 மில்லியன் டாலர்கள் வசூலித்துள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் தென்னிந்திய மொழிப் படங்களின் இதற்கு முந்தைய சாதனை வசூலை பாகுபலி படம் முறியடித்துள்ளது. எந்திரன், லிங்கா ஆகிய படங்கள்தான் இதற்கு முன் முதல் நாள் வசூலில் சாதனை புரிந்த தென்னிந்தியப் படங்களாக இருந்தன.

கர்நாடகாவில் பெங்களூருவில் மட்டும் சுமார் 30க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்தப் படத்தின் முதல் நாள் வசூலாக 4 கோடியை வசூலித்திருக்கிறதாம். கேரளாவில் தியேட்டர்கள் ஸ்டிரைக்கினால் எதிர்பார்த்த வசூல் குறைந்திருக்கும் என்கிறார்கள்.

இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் இந்த இரண்டு நாட்களுக்குள்  பாகுபலியின் வசூல் 100 கோடியைத் தாண்டி தெலுங்குத் திரையுலக வரலாற்றில் புதிய சாதனை படைக்க உள்ளது என்பது மட்டும் உறுதி.


Post your comment





Related News
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.!
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions