சீனாவில் 5000 திரையரங்குகளில் பாகுபலி!

Bookmark and Share

சீனாவில் 5000 திரையரங்குகளில் பாகுபலி!

பாகுபலி படத்தின் சர்வதேச வெளியீடு சீனா நாட்டில் இருந்து ஆரம்பமாக உள்ளது. தமிழ், தெலுங்கில் நேரடியாகவும் ஹிந்தியில் டப்பிங் செய்தும் வெளியிடப்பட்ட பாகுபலி படம் பல நாடுகளில் வெளியிடப்பட்டது. அந்த நாடுகள் வழக்கமான இந்தியத் திரைப்படங்களை வெளியிடும் நாடுகள்.

ஆனால், இதுவரை இந்தியத் திரைப்படங்களில் தென்னிந்தியத் திரைப்படங்கள் அதிகம் வெளியிடப்படாத நாடுகளிலும் இந்தப் படத்தை வெளியிடும் முயற்சியில் தற்போது இறங்கியிருக்கிறார் தயாரிப்பாளர்கள். அதற்காகவே சர்வதேச வெளியீட்டுக்கேற்ற வகையில் பாகுபலி படத்தைத் தனியாக எடிட் செய்திருக்கிறார்கள். 

சில நாட்களுக்கு முன் டொரன்டோ சர்வதேசத் திரைப்பட விழாவிலும் சர்வதேச வினியோகஸ்தர்களுக்காக திரையிடப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது சீனா நாட்டில் இப்படத்தை வெளியிடுவதற்கான ஒப்பந்தத்தில் தயாரிப்பாளர்கள் கையெழுத்திட்டுள்ளதாகத் செய்தி வெளியாகியுள்ளது.

ஆமீர்கான் நடித்த பிகே படத்தை சீனா நாட்டில் வெளியிட்ட வினியோக நிறுவனம் தான் பாகுபலி படத்தையும் அங்கு வெளியிட உள்ளது. சுமார் 5000 திரையரங்குகள் வரை படத்தை வரும் நவம்பர் மாதம்  வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். 

 சீனப் படங்களுக்கே உரிய சில அம்சங்கள் பாகுபலி படத்திலும் உள்ளதால் அங்கு இப்படம் பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.!
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions