பாகுபலி வெற்றி ருத்ரமாதேவிக்கு உதவுமா ?

Bookmark and Share

பாகுபலி வெற்றி ருத்ரமாதேவிக்கு உதவுமா ?

பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா மற்றும் பலர் நடித்து வெளிவந்துள்ள பாகுபலி படம் பல புதிய சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கிறது. இந்தியத் திரையுலகில் இப்படி ஒரு சரித்திரப் படமாக என ஹிந்தித் திரையுலகமும் வியக்க வைக்கம் அளவிற்கு இந்தப் படம் அமைந்துள்ளது.

அதிலும் குறிப்பாக போர்க்காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் பல தொழில்நுட்பக் கலைஞர்களையும் வியக்க வைத்திருக்கிறது. தெலுங்குத் திரையுலகில் எந்தப் படம் எப்படி ஓடும் என்பதை அவ்வளவாக கணிக்கவே முடியாது.

அதிரடியான மசாலாப் படங்களுக்கும் ரசிகர்கள் ஆதரவளிப்பார்கள், அதே சமயம் சிறந்த படங்களுக்கும் ஆதரவளிப்பார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளிவந்து ஒரு சரித்திரப் படத்திற்கும் அதிகமான ஆதரவளித்துள்ளார்கள்.

இந்தப் படத்தின் வெற்றி அப்படியே ருத்ரமாதேவி படத்திற்கும் திரும்புமா என்பது இப்போதைய கேள்வியாக உள்ளது. உடனடியாக இந்தப் படம் வெளிவராமல் இன்னும் சில வாரங்கள் கழித்து அதாவது பாகுபலி படம் ஓடி முடித்த பிறகு வெளியானால்தான் நன்றாக இருக்கும் என திரையுலகினர் கருதுகிறார்களாம்.

இதனிடையே, ருத்ரமாதேவி படத்தை எதிர்பார்த்தபடி வியாபாரம் செய்ய முடியாததால் படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான குணசேகர் மிகவும் கவலையடைந்துள்ளதாக டோலிவுட்டில் ஒரு செய்தி பரவி வருகிறது. அவருக்குக் கை கொடுத்து உதவ சில வினியோகஸ்தர்கள் முன் வந்துள்ளார்கள் என்றும் சொல்கிறார்கள்.

பாகுபலி முதல் பாகத்தில் அனுஷ்காவிற்கு அதிக முக்கியத்தும் இல்லாததால் ருத்ரமாதேவி படம் நிச்சயம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவும் வாய்ப்புள்ளது.

இருந்தாலும் சுமார் 200 கோடி ரூபாய் செலவில் பாகுபலி படம் தயாரிக்கப்பட்டுள்ளது, ஆனால் ருத்ரமாதேவி படம் சுமார் 80 கோடி ரூபாய் செலவில்தான் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த செலவு வித்தியாசம் படத்திலும் எதிரொலிக்காமல் இருந்தால் ருத்ரமாதேவி யும் வெற்றி பெற வாய்ப்புள்ளது.


Post your comment





Related News
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.!
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions