ஒரே வாரத்தில் 265 கோடி வசூலித்த பாகுபலி!

Bookmark and Share

ஒரே வாரத்தில் 265 கோடி வசூலித்த பாகுபலி!

இந்திய சினிமாவில் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு வெளியாகியிருக்கும் படம் பாகுபலி. நான்ஈ படத்தை அடுத்து ராஜமவுலி இயக்கியுள்ள இந்த பிரமாண்ட படத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது என்று திரையுலக பிரபலங்களெல்லாம் வியப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக, அந்த படத்தில் இடம்பெற்ற பாகுபலி, பல்லாலத்தேவன், சிங்களத்தேவன், தேவசேனா, அவந்திகா, சிவகாமி தேவி, கட்டப்பா ஆகிய கதாபாத்திரங்கள் ஆழ்மனதிற்குள் பதிந்து கொண்டிருப்பதாக ஆளாளுக்கு கருத்து சொல்லி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் பாகுபலி திரையிட்ட அனைத்து தியேட்டர்களிலும் தொடர்ந்து வசூல் சாதனை புரிந்து கொண்டிருக்கிறதாம்.

அந்த வகையில், தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 25 கோடியை தாண்டி இன்னும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறதாம். இதனால் பாகுபலி எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக வசூலிக்கும் என்கிறார்கள்.

மேலும், 250 கோடியில் தயாரிக்கப்பட்ட இப்படம் வெளியாகி ஒரு வாரத்தில் உலக அளவில் 265 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாம்.


Post your comment





Related News
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.!
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions