பாகுபலி படத்தினால் விஜய் படத்துக்குப் பிரச்சனை

Bookmark and Share

பாகுபலி படத்தினால் விஜய் படத்துக்குப் பிரச்சனை

சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் விஜய், மோகன்லால், காஜல் அகர்வால், பூர்ணிமா பாக்யராஜ் நடிக்க நேசன் என்பவர் இயக்கிய படம்  ஜில்லா கடந்த 2014 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 10-ஆம் தேதி இப்படம் வெளியானது.

எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு ஜில்லா ஓடவில்லை என்றாலும், விஜய்யின் ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பைப் பெற்றது. தமிழ்நாட்டில் ஜில்லா வெளியானபோது ஆந்திராவில் ஒரு சில தியேட்டர்களில் மட்டும் குறிப்பாக நகரி போன்ற தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள ஊர்களில் மட்டும் நேரடியாக வெளியிடப்பட்டது.

ஆந்திராவில் விஜய்க்கும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு, இப்படத்தை தெலுங்கு மொழியில் டப்பிங் செய்து வெளியிட திட்டமிட்டனர். கடந்த சில மாதங்களாக அதற்கான வேலைகளை செய்து வந்தனர்.

தற்போதே டப்பிங் பணிகள் நிறைவுற்று ஜில்லா தெலுங்கு படத்தை இம்மாதம் 24-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

தற்போது தியேட்டர்களை ஒப்பந்தம் செய்யும் வேலையில் மும்முரமாக இறங்கியுள்ளனர். பாகுபலி ஏகப்பட்ட தியேட்டர்களில் இன்னும் ஓடிக்கொண்டிருப்பதால் ஜில்லா தெலுங்கு டப்பிங் படத்துக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்!


Post your comment





Related News
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.!
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions