பாகுபலி எம்.ஜி.ஆர் பட கதை தான் : பிரபாஸ்

Bookmark and Share

பாகுபலி எம்.ஜி.ஆர் பட கதை தான் : பிரபாஸ்

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியாகியிருக்கும் பிரமாண்ட படம் பாகுபலி. திரையிட்ட அனைத்து ஏரியாக்களிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அப்படத்தின் சக்சஸ் பிரஸ்மீட் நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. அதில், பிரபாஸ், ரம்யா கிருஷ்ணன், ஸ்டுடியோ கிரீன் ஞான வேல்ராஜா, ஜி.வி.பிரகாஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பாகுபலி நாயகன் பிரபாஸ் பேசும்போது, பாகுபலி படத்துக்காக இரண்டரை ஆண்டுகளாக ஒர்க் பண்ணினோம். 2 வருடம் படப்பிடிப்பு. 6 மாதம் போஸ்ட் புரொடக்சன்ஸ் வேலைகள் நடந்தது. இப்போது படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்திருப்பது உற்சாகமாக இருக்கிறது.

மேலும், அடுத்து 2016ல் வெளியாகும் பாகுபலி 2ம் பாகம் இன்னும் சிறப்பாக இருக்கும். மேலும், முதல் பாகத்தில் அனுஷ்கா சம்பந்தப்பட்ட காட்சிகள் குறைவாக இருந்தது. ஆனால் அடுத்த பாகத்தில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகமாக இருக்கும். அவரது நடிப்பின் அழுத்தம் அப்போதுதான் தெரியும்.

இப்போதுதான் நான் தமிழுக்கு வந்திருக்கிறேன். முதல் படத்திலேயே ரசிகர்கள் எனக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள். அதனால் நேரடி தமிழ்ப்படங்களில் நடிக்கும் ஆசை ஏற்பட்டிருக்கிறது.

இங்குள்ள டைரக்டர்கள் அனைவருமே நல்ல திறமையானவர்கள்தான். அதனால் எனக்கு பொருத்தமான கதைகளில் நடிக்க யார் அழைத்தாலும் உடனே கால்சீட் கொடுத்து நடிப்பேன் என்றார்.

அதையடுத்து, இந்த பாகுபலி படத்தின் மூலக்கதை எம்ஜிஆர் நடித்த அடிமைப்பெண் படத்தின் கதை என்று நிருபர் ஒருவர் கேள்வி கேட்டபோது, நல்ல விசயம்தானே. எம்ஜிஆர் பெரிய நடிகர். அவர் நடித்தது போன்ற ஒரு படத்தில் நான் நடித்தது எனக்கு ரொம்ப பெருமையாக உள்ளது என்று பதிலளித்தார் பிரபாஸ்.

பின்னர், பாகுபலியில் சத்யராஜின் தலையில் கால் வைத்தது போன்று நடித்தது பற்றி கேள்விகள் எழுந்தபோது, அந்த காட்சியில் அப்படி என்னை நடிக்குமாறு டைரக்டர் சொன்னபோது ஷாக் ஆகி விட்டேன்.

சீனியர் நடிகர் அவர். எனக்குகூட ஒரு படத்தில் அப்பாவாக நடித்திருக்கிறார். தமிழ்நாட்டில் பெரிய நடிகரும்கூட. அப்படிப்பட்ட அவர் தலையில் எப்படி நான் காலை தூக்கி வைத்தபடி நடிப்பது என்று தயங்கினேன்.

ஆனால், அந்த காட்சியைப்பற்றி பின்னர் டைரக்டர் விளக்கியபோது, சத்யராஜ் சாரே அது சரிதான் என்று சொல்லி என்னை அப்படி நடிக்க சொன்னார். என்றாலு, அந்த காட்சியில் ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் நடித்தேன் என்றார் பிரபாஸ்.


Post your comment





Related News
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.!
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions