நவம்பரில் தொடங்கும் பாகுபலி 2

Bookmark and Share

நவம்பரில் தொடங்கும் பாகுபலி 2

ராஜமௌலி இயக்கத்தில் உருவான பாகுபலி திரைப்படம் ஆந்திரா, தெலுங்கானாவில்  மட்டுமல்லாது தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, வட இந்தியா, வெளிநாடுகள் என வெளியான 600 கோடி ரூபாயைக் கடந்து அனைத்து இடங்களிலும் வசூல் மழையைப் பொழிந்தது. 

இதனிடையே பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு 60 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்குப் பிறகு ஆரம்பமாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால், படப்பிடிப்பு மேலும் சில மாதங்கள் தள்ளிப் போகும் நிலை உருவாகியுள்ளது. 

முதல் பாகத்திற்குக் கிடைத்த அசாத்திய வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தை இன்னும் அதிகமான படைப்பாக்கத்துடன் கொடுக்க ராஜமௌலி தயாராகவுள்ளார். அதனால், இரண்டாம் பாகத்திற்கான ஸ்கிரிப்ட்டில் மேலும் மெருகேற்றி வருதால் நவம்பர் மாத தொடக்கத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

படப்பிடிப்பு இரண்டு மாதங்கள் வரை தள்ளிப் போவதால் படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில்தான் இரண்டாம் பாகத்தை வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். 


ஆனால் இப்போது அடுத்த வருட நவராத்திரி விடுமுறையில் படத்தை வெளியிடலாம் என முடிவு செய்துள்ளார்களாம். அதன் பின் கிராஃபிக்ஸ் உருவாக்கத்தில் ஏதாவது தாமதம் ஏற்பட்டாலும் படம் தள்ளிப் போகவும் வாய்ப்புள்ளது.


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
கூத்தன் படம் பார்ப்பவர்களுக்கு 18 பவுன் தங்கம்: அசரடிக்கும் தயாரிப்பாளர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions