பாகுபலி 2 தொடங்கிய ராஜமௌலி!

Bookmark and Share

பாகுபலி 2 தொடங்கிய ராஜமௌலி!

ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி படத்தின் முதல் பாகம் இந்திய அளவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் மிகப் பெரிய வசூலை அள்ளியது. 

எதிர்பார்ப்புகளையும் மீறி பல கோடிகளை வசூலித் பாகுபலி திரைப்படம் இன்னும் பல திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இதனிடையே, அக்டோபர் மாதம் ஆரம்பமாக உள்ள பாகுபலி இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு வேலைகள் பற்றி தனது குழுவினருடன் ராஜமௌலி ஆலோசனை நடத்தியுள்ளார். சில தினங்களுக்கு முன் அவரது அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் படக்குழுவினர்கள் கலந்து கொண்டனர். 

இரண்டாம் பாகத்தை எப்படி எடுப்பது, ஏதாவது கதாபாத்திரங்களை கூடுதலாகச் சேர்க்கலாமா என்பது குறித்தும் விவாதம் நடந்துள்ளதாகத் தெரிவிக்கிறார்கள்.

முதல் பாகத்தின் வெற்றி ராஜமௌலிக்கு கூடுதல் அழுத்தத்தைக் கொடுத்துள்ளது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் இன்னும் சிறப்பாகவும், முதல் பாகத்தில் இருந்த ஒரு சில தவறுகளைக் கூட களையும் விதத்தில் இருக்கும் என தெரிகிறது. அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் படத்தைக் கொண்டு வர இருக்கின்றனர்.


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
கூத்தன் படம் பார்ப்பவர்களுக்கு 18 பவுன் தங்கம்: அசரடிக்கும் தயாரிப்பாளர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions