பாகுபலியின் நட்சத்திர நாயகன் பிரபாஸின் அடுத்த படம்!

Bookmark and Share

பாகுபலியின் நட்சத்திர நாயகன் பிரபாஸின் அடுத்த படம்!

பாகுபலி 2ம் பாகத்தின் எதிர்பார்ப்புகள் எகிறிகொண்டிருக்கும் நேரம் இது. சமூக வலைதளங்களில் ரசிகர்கள், விமர்சகர்கள் கூட அவரது அடுத்த படத்தை வெள்ளித்திரையில் காண்பதற்கு ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

இந்தியாவின் மிக சிறந்த காவிய திரைப்படங்களில் ஒன்றான பாகுபலியின் நட்சத்திர நாயகன் பிரபாஸ் மீண்டும் மக்கள் மனதை கவர ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் "சாஹூ" மூலம் நடிக்க தயாராகிவிட்டார்.

சாஹூவில் பிரபாஸ் முற்றிலும் மாறுபட்ட ஒரு வித்தியாசமான பின்புலத்தில் நடிக்கவுள்ளார். உயர் தொழில்நுட்பத்துடன் அதிரடியும் காதலும், விறுவிறுப்பும் உற்சாகமும் கலந்த ஒரு ஜனரஞ்சகமான படைப்பாக உருவாகிறது.

அமிதாப் பட்டாச்சார்யாவின் ரசிக்கதக்க பாடல் வரிகளை, சங்கர்-எஹ்சான்-லாய் இணை இசையில் குழைத்து உங்கள் காதுகளில் ரீங்காரமிட பாடல் பட்டியல் தயாராகிவிட்டது.

இயக்குனர் சுஜீத் இயக்க, இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரம்மாண்டமாக சாஹூ தொடர்ந்து படமாக்கப்பட்டுவரும் நிலையில், திரையரங்குகளில் அடுத்த வாரம் வரவிருக்கும் பாஹுபலி 2 படத்துடன் நீங்கள் சாஹூவின் டீஸர் காணலாம்.

சாஹூ ஒரு மிகப்பெரிய அளவில், வானளாவிய வெற்றியை பெறும் என எதிர்பார்க்கபடுகிறது. நினைவிருக்கட்டும் ஏப்ரல் 28 ல் சாஹூ டீஸர்!!


Post your comment





Related News
அம்மாடி ஜனவரி 26-ல் மட்டுமே இத்தனை படங்கள் ரிலீஸா?
சாமி-2 படத்தால் த்ரிஷாவுக்கு வந்த சிக்கல் - தயாரிப்பாளர் அதிரடி ட்வீட்.!
தளபதி-62 படம் எப்போது தொடங்கும்? - கசிந்தது சூப்பர் தகவல்.!
விஷால் படம் ஹிந்தி டப்பிங் மட்டுமே இத்தனை கோடி வியாபாரமா?
தளபதி-62 படத்தை பற்றிய முக்கியத் தகவலை கசிய கீர்த்தி சுரேஷ்.!
த்ரிஷா மனசு வைத்தால் மட்டுமே இனி சாமி-2 - அதிர்ச்சியில் படக்குழுவினர்.!
தளபதி-62 பாடல்கள் மற்றும் விஜய் பற்றிய சர்ப்ரைஸ் தகவலை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்.!
தளபதி-62 படத்தில் விஜயின் கதாபாத்திரம் குறித்து கசிந்த ரகசியம் - கொண்டாடும் தளபதியன்ஸ்.!
மலேசிய கலை நிகழ்ச்சியில் 2.O படத்தின் டீசர் வெளியீடா? - வெளிவந்த உண்மை.!
இணையத்தை கலக்கும் ரசிகர்களின் தளபதி-62 போஸ்டர்கள் - புகைப்படங்கள் உள்ளே.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions