தமிழகத்தில் வெளியாகாத பாகுபலி-2... ரசிகர்கள் ஏமாற்றம்!

Bookmark and Share

தமிழகத்தில் வெளியாகாத பாகுபலி-2... ரசிகர்கள் ஏமாற்றம்!

தமிழகத்தில் இன்று பாகுபலி - 2 வெளியாகததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். விநியோகிஸ்தர்களுக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையால் படம் தமிழில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எஸ்எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் உருவான படம் பாகுபலி. ரசிகளிடையே பெரும் வரவேற்பை பெற்ற இந்தப் படம் வசூலிலும் சாதனை படைத்தது.

கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற கேள்வியுடன் முடிந்த பாகுபலி படத்திற்கு பதில் கூறும் வகையில் இரண்டாவது பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பாகுபலி கன்குளுஷன் என்ற இரண்டாம் பாகம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் இன்று ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கான டிக்கெட் முன்பதிவுகளும் விறுவிறுப்பாக நடைப்பெற்றன. படத்தைக் காண மக்கள் பெரும் ஆர்வத்தோடு காத்திருந்தனர். தமிழகத்தில் இன்று(ஏப்.,28) பாகுபலி-2 வெளியாகவிருந்தது.

இந்நிலையில், பட விநியோகிஸ்தர்களுக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையால் படம் தமிழில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விநியோகிஸ்தர்கள் பாக்கி வைத்திருப்பதால், கியூப் மூலம் படத்தை பதிவேற்றவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழில் வெளியாகாதபோதும், சென்னையில் தெலுங்கு மொழியில் பாகுபலி-2 படம் வெளியானது. தமிழகம் முழுவதும் 650 திரையரங்குகளில் தமிழில் பாகுபலி-2 படம் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
தளபதி-62 படத்தில் விஜய் இதை பற்றி தான் பேசப் போகிறாரா? - கசிந்தது ரகசியம்.!
பிரபாஸ் உருவத்தை முதுகில் டாட்டூ குத்திய ரசிகை!
`கலகலப்பு-2' படக்குழுவின் புதிய அப்டேட்
`விஸ்வரூபம்-2' படத்தின் முக்கிய அப்டேட்
ஆந்திர அரசின் 13 விருதுகளை அள்ளிய ‘பாகுபலி’
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!
பல பெண்களின் கற்பை சூறையாடிய பாகுபலி நடிகர் - வெளியான அதிர்ச்சி தகவல்.!
தள்ளிப்போகும் ரஜினிகாந்தின் `2.0' ரிலீஸ்?
தனது வெற்றிக் கூட்டணியுடன் மீண்டும் இணைந்த பிரபுதேவா
இந்தியன்-2 படத்தால் ஷங்கருடன் முதல் முறையாக இணையும் இசையமைப்பாளர் - யார் அது?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions